திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம்பிடித்து மிரட்டிய குமரி கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பகுதியை சேர்ந்தவர் விஜி கட்டிட தொழில் செய்து வருகிறார், கட்டிட வேலைக்காக அடிக்கடி கேரளாவுக்கு சென்று வருவார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே நேமம் பகுதிக்கு கட்டிட வேலைக்காக சென்றிருந்தார் விஜி.

அப்போது அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த பெண்ணை தான் உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், கல்யாணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் விஜி கூறி அவரிடம் நெருங்கி பழகினார்.  அந்த பெண்ணின் அப்பா அம்மா யாருமே இல்லாத நேரங்களில் விஜி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரிடம் திருமண ஆசைக்காட்டி வலு கட்டாயமாக உல்லாசம் அனுவபவித்துள்ளார். இதனையடுத்து கற்பை இழந்த அந்த பெண் அழுத்தும், அந்த பெண்ணை சமாதானப்படுத்துவதற்காக மாலை மாற்றி கல்யாணமும் செய்து கொண்டார்.

இந்நிலையில் அந்த இளம் பெண் கர்ப்பம் அடைந்ததால் அதுபற்றி விஜியிடம் அவர் கூறினார். இதனால் அவரை அந்த பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்து உள்ளார். இதேப்போல 2 முறை அந்த பெண்ணுக்கு கரு கலைப்பு செய்துள்ளார்.

நாளடைவில் அந்த பெண் தன்னை ஊர் அறிய கல்யாணம் செய்துகொள்ளும் படி விஜியிடம் கெஞ்சியும், அழுத்தும் கேட்டுள்ளார். இதனால் அவரை சந்திப்பதை விஜி கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார். தொடர்ந்து அந்த பெண் கல்யாணத்திற்கு வற்புறுத்தியதால் அவருடன் தனிமையில் இருந்தபோது தனது செல்போனில் பிடித்த வீடியோ காட்சிகளை வெளியிட்டு விடுவதாக சொல்லி மிரட்டினார். இதனால் பயந்துபோன அந்த பெண் நடந்த சம்பவங்களை தனது பெற்றோரிடம் சொல்லி கண்ணீர்விட்டு அழுதார்.

மகளுக்கு நடந்த கொடுமையை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் கொடுக்க, வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான விஜியை தேடி வந்தனர். அப்போது திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியில் வைத்து விஜியை போலீசார் கைது செய்தனர். அவரிடம், கைப்பற்றிய செல்போனில் அந்த பெண்ணுடன் தனிமையில் இருந்த சமயத்தில் எடுத்த வீடியோக்கள் ஏராளமாக இருந்துள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது விஜி மீது குமரி மாவட்டத்திலும் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.