Asianet News TamilAsianet News Tamil

கேரளாவில் பள்ளிக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் மாணவர்; இறுதியில் நடந்தது இதுதான்!!

கேரளாவில் பள்ளி ஒன்றில் அத்துமீறி போதையில் நுழைந்த முன்னாள் மாணவர் ஒருவர் மாணவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Kerala: Ex-student uses air pistol in school in Thrissur!!
Author
First Published Nov 21, 2023, 2:03 PM IST | Last Updated Nov 21, 2023, 2:19 PM IST

திருச்சூரில் நைக்கனல் என்ற இடம் உள்ளது. இங்கு விவேகோடயம் மாணவர்கள் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளிக்குள் இன்று காலை சுமார் 10.15 மணிக்கு கையில் துப்பாக்கியுடன் இளைஞர்  ஒருவர் நுழைந்தார். மாணவர்களைப் பார்த்து துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சித்தார். அதற்குள், பள்ளி ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த மக்கள் அதிரடியாக அவரை மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் ஜெகன் என்பதும், பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதும் தெரிய வந்துள்ளது. 

விசாரணையில், கைது செய்யப்பட்டு இருக்கும் ஜெகன் போதையில் முதலில் பள்ளியின் அலுவலகத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த இருக்கைகளை தள்ளிவிட்டு, பாக்கெட்டில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த ஊழியர்களை நோக்கி காட்டியுள்ளார். இந்த நிலையில் திடீரென பள்ளி வகுப்பறைக்குள் சென்ற ஜெகன் மூன்று முறை சுட்டுள்ளார். 

நெல்லையில் பயங்கரம்! தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் அலுவலகம் மீது 3 நாட்டு வெடிகுண்டு வீச்சு! சிறுவன் கைது!

பள்ளி ஊழியர்கள் இவரை தடுப்பதற்கு முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த இடத்தில் இருந்து ஜெகன் தப்பி ஓடியுள்ளார். ஆனாலும், விடாமல் பள்ளி ஊழியர்கள் அவரை விரட்டினர். வெளியே ஓடியவரை அந்தப் பகுதி மக்களின் உதவியுடன் இறுதியில் பிடித்தனர். 

மாணவர்களை துப்பாக்கியால் சுடும் நோக்கத்துடன் பள்ளிக்குள் ஜெகன் வந்திருப்பது தெரிய வந்துள்ளது. திருச்சூர் கிழக்கு போலீசார் மற்றும் திருச்சூர் நகர குற்றவியல் போலீஸ் ஏசிபி மற்றும் பிற போலீஸ் அதிகாரிகள் ஜெகனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூரில் சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து ஹார்டின் விட்ட வாலிபர் போக்சோவில் கைது

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios