கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள கேரள எல்லைப் பகுதியான நெய்யாற்றின் கரை ஊராட்டுக்காலாவை சேர்ந்தவர் ராகுல் இவரது மனைவி சவுமியா. கடந்த மூன்று  ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  சவுமியா அய்யூரைச் சேர்ந்தவர். திருவனந்தபுரம் அருகே காஞ்சிரங்குளம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் ராகுல் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.  

பரஸல்லாவில் உள்ள அஞ்சலகத்தில் அதிகாரியாக பணி புரிந்த சவுமியா கடந்த மூன்று மாதங்களுக்கு  கொல்லத்திற்கு மாறுதலாக வந்தார். இந்த தம்பதி அந்த ஏரியாவில் மிகவும் புகழ் பெற்றவர்கள். யார் ? என்ன உதவி கேட்டாலும் உடனே அவர்கள் இருவரும் செய்து தருவார்கள்.  மிகச் சிறந்த , அழகான தம்பதி என அப்பகுதி மக்கள் அவர்களைப் பார்த்து வியந்துள்ளனர். இந்த தம்பதிக்கு இஷானியா என்ற 2 வயது பெண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில்தான் திருவனந்தபுரம் அருகே உள்ள மையநாடு என்ற இடத்தில் இவர்களது உறவினர் ஒருவரின் திருமணம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ராகுலும், சவுமியாவும் காரில் புறப்பட்டுச் சென்றனர். தங்களது குழந்தையை  ராகுலின் பெற்றோரிடம் விட்டுச்  சென்றனர்.

இதனிடையே நெய்யாற்றின்கரை அருகே கடவாட்டுக்கோணம் என்ற இடத்தில் அவர்களது சென்ற காரும் கேஎஸ்ஆர்டிசி பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதில் தம்பதி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ராகுல் – சவுமியா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்களின் உடல் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவர்களது உடலைப் பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர்.

ராகுல் – சவுமியா மரணம் குறித்து  தெரிந்ததும் உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சியடைந்தனர்.  அந்த குடும்பத்தை எவ்வாறு ஆறுதல்படுத்துவது என்பதில் அப்பகுதி மக்கள் கண்ணீரில் மூழ்கினார். 

அவர்களின் குழந்தை இஷானியாவை  கையில் ஏந்தியிருந்த  ராகுலின் தாயார், "இந்த குழந்தைக்கு இனி யார் உணவளிப்பார்கள்?" என புலம்பினார். அந்த குட்டி இஷானியாவை  பிடித்துக் கொண்டார்.   உங்க அப்பா, அம்மாவைபப் பார் என குழந்தைக்கு அந்த உடல்களை காம்டி கதறினார் ராகுலின் தாயார். அதைப் பார்த்து ஒன்றும் புரியாமல் இஷானியாவும் கதறி அழுதது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதையடுத்து இன்று மாலை  ராகுல் – சவுமியா தம்பதியின் இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இந்த நிகழ்வு கேரளாவை உலுக்கியுள்ளது.