புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கஸ்தூரி என்ற இளம்பெண்ணை கொலை செய்து ஆற்றில் வீசியதாக கூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
 
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குலமங்களம் வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் கஸ்தூரி. இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு மருந்துக்டையில் வேலை செய்து வந்துள்ளார். தினமும் வேலைக்கு சென்று சரியான நேரத்தில் வீடு திரும்பும் கஸ்தூரி கடந்த 28 ஆம் தேதி வேலைக்கு சென்று வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து பதற்றம் அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால், ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் செய்து உள்ளனர்.


 
பின்னர், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், புதுக்கோட்டை மாவட்டம்  அதிரான்விடுதியை சேர்ந்த நாகராஜ் என்ற நபருக்கும்,கஸ்தூரிக்கும் பழக்கம் இருந்துள்ளது தெரிய வந்து உள்ளது. லோடு ஆட்டோ ஓட்டுனரான நாகராஜ், கடந்த 28 ஆம் தேதியன்று கஸ்தூரியை அழைத்துசென்றதும் தெரிய வந்து உள்ளது.

மேலும் கஸ்தூரியின் உடலை ஆற்றில் தூக்கி எரிந்து விட்டு, சென்னையில் பதுங்கி இருந்த நாகராஜை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், பல தகலவல்களை தெரிவித்து உள்ளார். ஆனாலும் அவருடைய தகவல்கள் முரண்பாடாக உள்ளதாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாகராஜ் கொடுத்த வாக்குமூலம்:

ஆலங்குடி காட்டுப்பகுதிக்கு சென்று உல்லாசமா இருந்த போது  கஸ்தூரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து விட்டதாகவும், பின்னர் கஸ்தூரியின் உடலை ஒரு சாக்குப்பையில் கட்டி, தஞ்சை மாவட்டம் பெராவூரணி அருகே உள்ள ஆற்றில் வீசி எறிந்ததாகவும் பகீர் தகவலை கொடுத்து உள்ளார்.
 
ஆனால், கஸ்தூரியின் உறவினர்கள் நாகராஜ் சொல்வது பொய், கஸ்தூரியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து உள்ளனர் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர்.உண்மையிலேயே கஸ்தூரிக்கு மாரடைப்பு வந்ததா..? அல்லது பாலியல் பலாத்காரம் செய்து அவரை கொலை செய்து உள்ளாரா என்ற பாணியில் போலீசார் துருவி துருவி விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது கஸ்தூரியின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். பிரேத பரிசோதனையின் முடிவில் தான் உண்மை நிலை தெரியவரும் என காவலர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.