கரூர் அருகே கள்ளக்காதலுக்கு இருவீட்டார் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் உல்லாசமாக இருந்து விட்டு இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்த கலிங்கிப்பட்டியை சேர்ந்த கந்தசாமி மகள் சிவபாக்கியம்(22). இவரது கணவர் சதீஷூடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவகாரத்து பெற்று தந்தை கந்தசாமி வீட்டில் சிவபாக்கியம் வசித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன் கரூர் நீதிமன்றத்தில் உதவியாளராக சிவபாக்கியம் பணியில் சேர்ந்தார். 

தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சி நல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம்(36) திருமணமான இவருடன் சிவபாக்கியம் பழகி வந்தார். இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். காலபோக்கில் இவர்களது கள்ளக்காதல் இருவீட்டாருக்கும் தெரியவந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், ஆறுமுகம், சிவபாக்கியம் ஆகியோர் மனவேதனையில் இருந்து வந்தனர். 

இந்நிலையில், நேற்று இரவு ஆறுமுகத்தின் தோட்டத்துக்கு இருவரும் சென்று உல்லாசமாக இருந்துள்ளனர். பின்னர், வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை இருவரும் குடித்தனர். இதில், சிவபாக்கியம் உயிரிழந்தார். இதையடுத்து, சிவபாக்கியத்தின் துப்பட்டாவால் அருகில் உள்ள மரத்தில் ஆறுமுகம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை இந்த வழியாக சென்றவர்கள் பார்த்தபோது இருவரும் உயிரிழந்து கிடந்ததையடுத்து கண்டு அதிர்ச்சியடைந்தனர். 

இது தொடர்பாக உடனே தோகைமலை போலீசார் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.