Asianet News TamilAsianet News Tamil

வேலியே பயிரை மேய்ந்த கதை…. கள்ளச் சந்தையில் கஞ்சா விற்பனை செய்த போலீஸ்…!

கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை போலீஸார் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தனர். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க கஞ்சா வியாபாரிகளிடமும் போலீஸார் லஞ்சம் வாங்கியதும் உறுதியானது.

Karnataka police sell cannabis in black market
Author
Bangalore, First Published Oct 11, 2021, 6:12 PM IST

கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்த கஞ்சாவை போலீஸார் கள்ளச் சந்தையில் விற்பனை செய்தனர். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க கஞ்சா வியாபாரிகளிடமும் போலீஸார் லஞ்சம் வாங்கியதும் உறுதியானது.

கர்நாடகத்தில் கடந்த சில மாதங்களாகவே போதைப்பொருள் வழக்குகள் ஆட்டிப்படைக்கின்றன. சில வாரங்களுக்கு முன்னர் சொகுசு பங்களாவை வாடகைக்கு எடுத்து அதில் கஞ்சா சாகுபடி செய்து வந்த வெளிநாட்டை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது அதனை மிஞ்சும் விதமாக மற்றொரு காரியம் நடந்தேறியுள்ளது.

Karnataka police sell cannabis in black market

கர்நாடக மாநிலம் ஹீப்பள்ளியில் போலீஸாரே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக நாளிதழ்களில் செய்தி வெளியானது. இதுகுறித்டு விசாரணை நடத்தி அம்மாவட்ட காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். அதனடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹீப்பள்ளியில் உள்ள ஏ.பி.எம்.சி. காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் மற்றும் 3 காண்ஸ்டபில்கள் கடந்த 30-ம் தேதி, கஞ்சா வியாபாரி வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒண்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார், கஞ்சா வியாபாரிகளையும் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

Karnataka police sell cannabis in black market

காவல்நிலையத்தில் வைத்து கஞ்சா வியாபாரிகளிடம் பேரம் பேசிய போலீஸார், அவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு கைது செய்யாமலும், வழக்குப்பதிவு செய்யாமலும் விட்டுவிட்டனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போலீஸாரே கள்ளச் சந்தையில் விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் கிடைத்த பணத்தை காவல் நிலையக் குழுவினர் பகிர்துகொண்டதும் விசாரணையில் அம்பலமானது.

Karnataka police sell cannabis in black market

லஞ்சம் வாங்கிக்கொண்டு கஞ்சா வியாபாரிகளை தப்பிக்கவைத்தது, பறிமுதல் செய்த கஞ்சாவை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஏழு போலீஸாரை பணியிடைநீக்கம் செய்த மாவட்ட காவல் ஆணையர், அவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கைகள் எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios