கள்ளக்காதலால் நடந்த விபரீதம்: மனைவியின் தலையை வெட்டிய இளைஞர்... 20 கி.மீ பைக்கில் சென்று போலீஸில் சரண்!

https://static.asianetnews.com/images/authors/5375b41b-c303-5568-beda-e699e57b9beb.jpg
First Published 11, Sep 2018, 1:37 PM IST
Karnataka Man Kills Wife.. Walks Into Police Station Head
Highlights

மனைவியின் தலையை வெட்டிய இளைஞர், தலையுடன் 20 கி.மீ தொலைவு பைக்கில் சென்று போலீஸில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவியின் தலையை வெட்டிய இளைஞர், தலையுடன் 20 கி.மீ தொலைவு பைக்கில் சென்று போலீஸில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஸ். இவரின் மனைவி ரூபா(28) இருவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகள் ஆகிறது, 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ரூபாவுக்கும், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.

இதையறிந்த சதீஸ் தனது மனைவி ரூபாவைக் கண்டித்துள்ளார். ஆனாலும் தொடர்ந்து ரூபா அந்த இளைஞரை அவ்வப்போது சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரு சென்ற சதீஸ் மாலை வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் ரூபாவும், அந்த இளைஞரும் தனிமையில் இருப்பதைப் பார்த்துவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த சதீஸ் அந்த இளைஞரையும், மனைவி ரூபாவையும் வீட்டில் இருந்த ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இளைஞர் தப்பி ஓடினார். 

ஆனால், ஆத்திரம் தீராத சதீஸ் ரூபாயை கொலை செய்தார். அதுமட்டுமல்லால், ரூபாவின் தலையை வெட்டி தனியே எடுத்தார். பின் அதை ஒரு சாக்கில் போட்டு, தனது பைக்கில் வைத்துக்கொண்டார். தனது கிராமத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள சிக்மங்களூரு போலீஸ் நிலையத்துக்கு சதீஸ் சென்றார். போலீஸ் நிலையத்தில் இருந்த போலீஸார் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்த நேரத்தில் ரத்தம் சொட்ட, சொட்ட தனது மனைவியின் தலையை தூக்கிக் காட்டி சரண் அடைவதாகத் தெரிவித்தார். 

இதைப் பார்த்த போலீஸார் அதிர்ச்சியில் உறைந்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார்கள். அதன்பின் சதீஸை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து சதீஸ் மீது வழக்குப்பதிவு செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

loader