உங்க அம்மா என்னை ஏமாத்திட்டு வேற ஒருத்தன் கூட போயிட்டா! நீ வா! கள்ளக்காதலியின் மகன், மகளையும் சீரழித்த கொடூரன்
டிஜேஷ் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பிறகு டிஜேஷ் அந்த பெண்ணின் வீட்டிலேயே கணவர் போல் வாழ்ந்து குழந்தைகளை கவனித்து வந்தள்ளார்.
2வது கள்ளக்காதலனுடன் தாய் ஓட்டம் பிடித்ததால் கள்ளக்காதலியின் மகன், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உடந்தையாக இருந்த பாட்டியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பத்துகாணி பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 3 பிள்ளைகளுடன் தாயாரின் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த டிஜேஷ் என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. பிறகு டிஜேஷ் அந்த பெண்ணின் வீட்டிலேயே கணவர் போல் வாழ்ந்து குழந்தைகளை கவனித்து வந்தள்ளார்.
இதனிடையே, அந்த இளம்பெண்ணுக்கு வேறொரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் நாளடைவில் டிஜேசுக்கு தெரிய வந்தது. உடனே கள்ளக்காதலியிடம் இதுதொடர்பாக கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண் 3 குழந்தைகளை தவிர்க்க விட்டு 2வது கள்ளக்காதலனுடன் எஸ்கேப் ஆனார். இருப்பினும் டிஜேஷ் வேலைக்கு சென்று கள்ளக்காதலியின் தாய் உள்பட 3 குழந்தைகளையும் கவனித்து வந்து உள்ளார்.
கள்ளக்காதலி இல்லாமல் ஏக்கத்தில் இருந்தத போது டிஜேசுக்கு கள்ளக்காதலியின் 15 வயது மகள் மீது ஆசை ஏற்பட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுதொடர்பாக பாட்டியிடம் சிறுமி கூறியுள்ளார். இதை பெரிதாக எடுத்துகொள்ளாமல் யாரிடமும் சொல்லக்கூடாது என தெரிவித்துள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட டிஜேஷ் கடந்த 4 மாதங்களாக சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். அதேபோல் சிறுமியின் 14 வயது தம்பியிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தார்.
இந்த விவகாரம் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு தெரியவந்ததை சிறமியை அழைத்து கொண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தனக்கு நடந்த கொடுமை குறித்து போலீசாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் பாட்டியை கைது செய்துள்ளனர். டிஜேசை பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.