மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கணவருக்கு தெரியவந்ததால் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த வீ.பாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன்(40). இவரது மனைவி செல்வி(35). கடந்த 17ம் தேதி  சுப்ரமணியன் வீட்டி மாடியில் மது அருந்திவிட்டு மீதமுள்ள மதுவை மறுநாள் காலை குடித்துள்ளார். இதையடுத்து, வாந்தி எடுத்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

இதுகுறித்து  சுப்ரமணியனின் தங்கை இந்திரா தியாகதுருகம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். இதில், அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பாத கூறியதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அதில்,  சுப்ரமணியணை கொலை செய்தது தெரியவந்தது. செல்வி போலீசில் அளித்த வாக்குமூலத்தில்;- இதே கிராமத்தை சேர்ந்த ஜெயமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

கணவர் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசமாக இருப்போம். இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததால்  என்னை அடித்து துன்புறுத்தினார். இதனால், எங்கள் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கணவரை நானும், ஜெயமுருகனும்  தீர்த்துக்கட்ட முடிவு செய்தோம். ஜெயமுருகனிடம்  பூச்சி மருந்தை எடுத்து வர சொல்லி  அதை வாங்கிபாதி அளவு இருந்த மதுபாட்டிலில் கலந்து வைத்துவிட்டேன். மறுநாள் மதுவை குடித்து சுப்ரமணியன் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் போலீசில் விசாரணையில் மாட்டிக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்த, செல்வி, ஜெயமுருகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.