கள்ளக்குறிச்சி அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11-வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பழனிச்சாமி (38) நைநாக பேசி வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். 

பின்னர், சிறுமி அழுதுகொண்டே நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார். 

இந்நிலையில் அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கையில் பழனிசாமி ஈடுபட்டுள்ளதால் அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்தார். இதனையடுத்து, பழனிசாமியை தடுப்புக்காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.