வெங்காயம் விலை உச்சம் அடைந்துள்ளதே தற்போது பரபரப்பு செய்தியாக மாறியுள்ளது. வரலாறு காணாத அளவு உயர்ந்து வரும் வெங்காயம் விலை பொதுமக்களை பெரிதும் கவலை கொள்ள செய்துள்ளது. குறிப்பாக இல்லத்தரசிகள் கண்களில் உரிக்காமலேயே வெங்காயம் விலை கண்ணீரை வரவழைத்து வருகிறது.

குறிப்பாக வெங்காய உற்பத்தியில் முன்னிலையில் வகிக்கும் மாநிலங்களான மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பொழிந்த அதிக மழைபொழிவால் வெங்காய விளைச்சலும், அதனைத் தொடர்ந்து விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவில் சுடகாட்டா பகுதியில் வெங்காய கடையில் புகுந்த மர்ம நபர்கள், கல்லாப்பெட்டியைத் திறந்து பார்த்தும், அதில் இருந்த பணத்தை அப்படியே வைத்துவிட்டு, 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான வெங்காய மூட்டையை திருடிச் சென்றுள்ளனர்.

 

அதுமட்டுமல்லாமல் வெங்காயத்தை போலவே இஞ்சி மற்றும் பூண்டு உள்ளிட்டவற்றையும் அவர்கள் திருடியுள்ளனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.