ஐதராபாத் ,கொம்பல்லி என்ற பகுதியை சேர்ந்தவர் சந்திப் இவரது தந்தை தொழிலதிபராக இருந்திருக்கிறார்,   சாப்ட்வேர் என்ஜினீயரான சந்திப்புக்கும் அவரது உறவுக்காரர் பெண்ணுக்கும் கடந்த மாதம் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டது.  இந்நிலையில் திருமணம் நடைபெற இருந்த நிலையில்,  நேற்று மாலை அவர் வெகுநேரமாகியும் அறையிலிருந்து வெளியில் வரவில்லை.  இதனையடுத்து  உறவினர்கள் கதவை தட்டி பார்த்தனர் ஆனால்  உள்ளிருந்து எந்த பதிலும் வராததால் கதவை உடைத்து உள்ளே நுழைந்து பார்த்தபோது மிகப்பெரும் அதிர்ச்சி காத்திருந்தது

 

இன்னும் சற்று நேரத்தில்  மணக்கோலத்தில் நிற்கவேண்டிய சந்திப் தூக்கில்  தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த  உறவினர்கள் மற்றும் அவரது தந்தை அவரை திருமணம் செய்து கொள்ள இருந்த மனப்பெண் சந்திப்பின் உடலைப்பார்த்து கதறி அழுதனர்.  மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.  இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்திப்பின் உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் சந்திப்பின் தாயார்  இறந்த நிலையில் அவர் தனது  தாத்தா,  பாட்டி அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.  அவரின் தாத்தா சில தினங்களுக்கு முன்பு இறந்ததால் மிகுந்த  மன உளைச்சலில் சந்தீப் இருந்ததாக தெரிகிறது.

 

தாத்தாவின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும்  சந்தேகிக்கப்படுகிறது. அதே நேரத்தில் சந்திப்புக்கு வேறொரு பெண்ணுடன் ஏதாவது காதல் இருந்ததா.? அல்லது  திடீர் தற்கொலைக்கு வேறு என்ன காரணம் எனபது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை  நடந்தி வருகின்றனர்.  திருமணம் நடைபெற இருந்த அரை மணி நேரத்திற்கு  முன்னர்  மணமகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது .