Asianet News TamilAsianet News Tamil

சடலமாக மீட்கப்பட்ட டிரைவர் நாகநாதன் உடல்... வெளியானது ஜெயசுதா போட்டோ! மர்டர் கேசில் வெளிவராத மர்மம்

சுற்றுலா செல்லவேண்டும் என கால் டாக்சியை வாடகைக்கு எடுத்து மதுரை கொட்டாம்பட்டி டாக்சி ஓட்டுநரை கொலை செய்து விட்டு காரை கடத்திய வழக்கில் போலீசார் தேடப்படும் இளம் பெண்ணின் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

jayasudha involved driver murder case
Author
Madurai, First Published Sep 18, 2019, 4:59 PM IST

சுற்றுலா செல்லவேண்டும் என கால் டாக்சியை வாடகைக்கு எடுத்து மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் டாக்சி ஓட்டுநரை கொலை செய்து விட்டு காரை கடத்திய வழக்கில் போலீசார் தேடப்படும் இளம் பெண்ணின் போட்டோக்கள் வெளியாகியுள்ளது.

சென்னை அசோக்நகரைச் சேர்ந்த நாகநாதன் கால்டாக்சி டிரைவராக இருந்தார். இவர் ஓட்டுநராக இருந்த கால் டாக்சியை கடந்த 6-ஆம் தேதி வாடகைகு எடுத்த கும்பல் குற்றாலத்துக்குச் செல்ல வேண்டும் என்று கூறி அழைத்துச் சென்றதாகக் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி கால் டாக்சி ஒன்றரை தொடர்பு கொண்ட நாகநாதன் மறுநாள் பணி முடிந்து திரும்பிவிடுவதாகத் தெரிவித்த நிலையில், கூறியபடி திரும்பவில்லை. இதையடுத்து கால்டாக்சி ஓனர் நாகநாதனை போனில் தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததால் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர் சென்னை போலீசார்.

இந்நிலையில், மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் சாலையோரம் அழுகிய நிலையில் கால்டாக்சி ஓட்டுநர் நாகநாதனின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. விசாரணையில். இதையடுத்து கால்டாக்சியை வாடகைக்கு எடுத்த கும்பல் டிரைவர் நாகநாதனை கொலை செய்து விட்டு காரை எடுத்துச் சென்றிருக்கக் கூடும் என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், காரை வாடகைக்கு எடுத்துச் சென்ற கும்பல் திருச்சி வழியாகச் சென்ற நிலையில் திருச்சியில் ஓட்டுநர் நாகநாதன் சாலையைக் கடக்கும் சிசிடிவி. காட்சிகள் வெளியாகியுள்ளன. மேலும், போலீசார் அந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்ணான திருச்சியைச் சேர்ந்த ஜெயசுதாவின் போட்டோவை வெளியிட்டுள்ளனர். சிசிடிவி. காட்சிகள் அடிப்படையில் அவர்கள் அங்கிருந்து சென்றிருக்க வாய்ப்புள்ள இடங்கள் அதன் அடிப்படையில் அவர்களது வேறு சிசிடிவி. காட்சிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜெயசுதாவின் போட்டோவை வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் மதுரையில் வாடகைக்காரை பதிவு செய்து டிரைவரை கொன்று, காரை  கடத்தியது தொடர்பான மேலும் இரு வழக்குகள் உள்ளதாகவும், இந்தக் கும்பலுக்கும் அதற்கும் தொடர்பு இருக்கிறதா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios