ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையதாக தமிழகத்தில் 33 பேரும், உத்திரபிரதேசத்தில் 19 பேர், கேரளாவில் 17 பேர், தெலுங்கானாவில் 13 பேர் என இந்தியா முழுவதும் 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அலோக் மிட்டல் தெரிவித்துள்ளார். 

கடந்த சில மாதங்களுக்கு முன் சிரியா மற்றும் இராக்கில் 88,000 சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பளவை ஐஎஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பிறகு சிரியாவை விட்டு விரட்டியடிக்கப்பட்டது. தற்போது ஐ.எஸ் அமைப்பு நைஜீரியா, ஏமன், ஆப்கானிஸ்தான் மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற பல நாடுகளில் செயல்பட்டு வருகிறது.  இந்நிலையில் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களாக இந்தியாவை சேர்ந்த 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.