முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த புரோட்டா மாஸ்டர் திருச்சியில் கைது செய்யப்பட்டார். 

நேற்று பிற்பகல் காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-ஐ தொடர்பு கொண்டு பேசிய ஒரு மர்ம நபர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப் போவதாகக் கூறிவிட்டு உடனடியாக இணைப்பை துண்டித்தார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் திருச்சி தில்லை நகரைச் சேர்ந்த 40 வயதான ரகமத்துல்லா என்பது தெரிய வந்தது.

இதையடுத்து  தில்லைநகர் போலீசார் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஸ்ட்புட் கடை ஒன்றில் புரோட்டா மாஸ்டர் வேலை செய்து வந்த இவர், வேலையில் இருந்து நிறுத்தப்பட்டதால் மன அழுத்தம் காரணமாக முதவர் எடப்பாடி பழனிசாமியை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்ததாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.