இந்த வரிசையில் மாமியாரை மருமகள் கொடுமை செய்துள்ள சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் 65 வயதுடைய ஹேமலதா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

தனது மருமகள் தன்னை தொடர்ந்து சாதியின் பெயரால் இழிவுபடுத்தி வருவதுடன், சொத்துக்களை அபகரித்து, தன்னை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டதாக காவல் நிலையத்தில் மாமியார் கொடுத்த புகாரின் பேரில் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் ஹைதராபாத்தில் உன்ன பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் நடந்துள்ளது. மாமியார் மருமகளுக்கு இடையேயான சண்டை காலம் காலமாக இருந்து வருகிறது. இன்று பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்கள் மாமியார் மருமகள் இடையே நடக்கும் மோதலை மையப்படுத்தியே எடுக்கப்படுகிறது. அந்த அளவுக்கு சுவாரசியம் நிறைந்ததாகவும், திரில் நிறைந்ததாகவும் மாமியார்-மருமகள் உறவு இருந்து வருகிறது. 

இந்த வரிசையில் மாமியாரை மருமகள் கொடுமை செய்துள்ள சம்பவம் ஒன்று வெளிச்சத்துக்கு வந்துள்ளது.தெலுங்கானா மாநிலம் தலைநகர் ஐதராபாத் அருகே உள்ள பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் 65 வயதுடைய ஹேமலதா என்ற பெண் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் கடந்த, 2017 ஆம் ஆண்டு தனது மகன் ஸ்ரீகாந்த்திற்கு சிந்து ரெட்டி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்ததாகவும், அவர்களுடன் தானும் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அன்றிலிருந்து தனது மகன் மற்றும் மருமகள் இணைந்து தன்னை சாதியின் பெயரால் அவமதித்தது மட்டுமல்லாமல், தன்னை ஒரு வயதானவர் என்றும் பாராமல் மோசமாக பேசி திட்டி, தாக்கி துன்புறுத்தியதாகவும் அந்தப்பென் தனது புகாரில் தெரிவித்துள்ளார். மகன் மருமகள் இருவரும் சேர்ந்து தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், தற்போது தான் ஒரு அனாதையாக இருப்பதாகவும் அவர் தன் புகாரில் கூறியுள்ளார்.

தனக்கு சொந்தமாக மீர்பாத்தில் இருந்த வீட்டை விற்று மகன், மருமகளிடம் தான் பணத்தைக் கொடுத்ததாகவும், அந்த வீட்டை விற்று பணம்தரும் வரை தன்னை நல்ல முறையில் அவர்கள் பார்த்துக் கொண்டதாகவும், வீடு விற்கப்பட்டு பணத்தை பெற்றவுடன் அவர்கள் தன்னை துன்புறுத்த தொடங்கிவிட்டதாகவும் அந்தப் பெண்மணி வேதனை தெரிவித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த போலீசார், புகாரில் உண்மை இருப்பதை அறிந்து, ஹேமலதாவின் சொத்தை அபகரித்து, அவரை சாதியின் பெயரால் கொடுமை செய்த மகன் ஸ்ரீகாந்த் மற்றும் மருமகன் சிந்துரா ரெட்டி ஆகியோர் மீது எஸ்ச, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம், உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருமகள், மாமியாரை சாதி பெயரால் இழிவுசெய்துவந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.