மயிலாடுதுறை அருகே இந்தியன் வங்கியை உடைத்த மர்மநபர்கள், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். அலாறம் ஒலித்ததால், அவர்கள் தப்பி சென்றனர். இதனால், பல லட்சம் தப்பியது. 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே இந்தியன் வங்கி கிளை அமைந்துள்ளது. இங்கு நேற்று இரவு சுமார் வந்த மர்மநபர்கள், பூட்டை உடைத்து உள்ளே  நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த லாக்கரை உடைக்க முயன்றபோது, அங்கு பொருத்தப்பட்டுள்ள அலாறம் ஒலித்தது. இதனால், அதிர்ச்சியடைந்த மர்மநபர்கள், அங்கிருந்து தப்பியோடினர்.

வங்கியில் எலிகள் அதிகளவில் உள்ளதால், இதுபோன்று அடிக்கடி அலாறம் ஒலிக்கும். இதனால் , அதிகரிகள் மற்றும் போலீசார் கண்டு கொள்ளாமல் அலட்சியமாக இருந்தனர். அதே நேரத்தில் அந்த கட்டிடத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, பூட்டு உடக்கப்பட்டு இருந்ததால், பொதுமக்கள் அங்கு திர்ண்டனர். இதையொட்டி அங்கு பரபரப்பு நிலவியது. 

தகவலறிந்து போலீசார் மற்றும் வங்கி அதிகாரிகள் சம்பவ இடத்துகு சென்றனர். அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும்,  நாகப்பட்டினம் எஸ்பிவிஜயகுமார்  சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வைவிட்டு விசாரணை நடத்தினார்.