Asianet News TamilAsianet News Tamil

உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுக்கவே தனி டீம்... மாணவிகளை அதிகாரிகளின் கட்டிலுக்கு விருந்தாக்கிய ஸ்வேதா! சிக்கிய 4000 ஆபாச வீடியோக்கள்...

கல்லூரி மாணவிகளை அரசியல் தலைவர்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகளுக்கு விருந்தாக்கி, அதை வீடியோ பணம் சாதித்த வந்த 5 பெண்களும் விசாரணை காவலில் அடைக்கப்பட்டனர்.  

India honeytrap case, 5 women taken for police interrogation
Author
India, First Published Sep 29, 2019, 12:11 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

மத்தியபிர தேசம் இந்தூரை சேர்ந்த சுவேதா என்ற சமூக சேவை நிறுவனம் நடத்தி வரும் பெண் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் நெருக்கம் காட்டி, அவர்களை தனது செக்ஸ் வலையில் சிக்க வைத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த விவகாரம் பற்றிய தகவல் போலீசாருக்கு தெரிய வர அதை தொடர்ந்து போலீஸ் கூடுதல் டி.ஜி.பி மேற்பார்வையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டது.

சீனியர் சூப்பிரண்டு ருச்சிவரதன் சிங் தலைமையிலான இந்த குழு முழுமையான விசாரணையை மேற்கொண்டதில் மத்தியபிரதேசத்தில் மிகப்பெரிய அளவில் சுவேதா உல்லாசம் அனுபவித்து அதை வீடியோ எடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது .ஐ.ஏ.எஸ்.-ஐ.பி.எஸ். அதிகாரிகள் என தொடங்கி அரசியல் தலைவர்கள் என அவரது உல்லாச வலையில் லிஸ்ட் ரொம்பவே பெரியது.

தனது லிங்க்கில் இருக்கும் அரசியல் புள்ளிகள் , அதிகாரிகள், தொழிலதிபர்கள் என அனைவருக்கும் கேட்க்கும் நேரத்தில்  கல்லூரி மாணவிகளை  சப்ளை செய்த சுவேதா, கல்லூரி மாணவிகள் மற்றும் அழகிகளுடன் அவர்கள் தங்கி இருப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து அவர்களை மிரட்டியே பணமும் பறித்து வந்துள்ளார்.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு படையினர் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் செக்ஸ் வலையில் வீழ்த்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மூலமாக அரசு காண்டிராக்ட்டுகளை பெறுவது மற்றும் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வாங்கித்தந்து பணம் பெறுவது என பயங்கர டீல் செய்து வந்துள்ளார். 

முதன்முதலாக ஒரு கல்லூரி மாணவியை வலையில் விழ வைத்த சம்பவம் மூலம் தான் போலீசாருக்கு சுவேதாவின் மோசடி லீலைகள் தெரியவந்தது. இந்தூர் பகுதியை சேர்ந்த மோனிகா பிளஸ்-2 முடித்து கடந்த ஆகஸ்டு மாதம் கல்லூரியில் சேருவதற்கு முயற்சித்தார். அப்போது சுவேதா விடம் தொடர்பு கொண்டால் பெரிய கல்லூரியில் சீட் கிடைக்கும் என அவருக்கு தகவல் கிடைக்க, சுவேதாவை மோனிகா சந்தித்தார். அப்போது சீட் வாங்கி தருவதாக சொல்லி தனது ஆடி காரில் மோனிகாவை போபால் நகருக்கு அழைத்து சென்றார். 

அங்கு மாநில அரசின் தலைமைச் செயலகத்தில் செயலாளர் அந்தஸ்தில் உள்ள 3 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளிடம் மோனிகாவை அறிமுகப்படுத்தி, அதன்பிறகு தனது ஆடி காரை மோனிகாவிடம் கொடுத்து பல்வேறு இடங்களுக்கும் பயணம் செய்ய வைத்தார். சுவேதா ஜெயினுக்கு உதவியாளராக ஆர்த்தி என்ற பெண் செயல்பட்டு வந்தார். ஆர்த்தி ஒருமுறை மோனிகாவை இந்தூரில் உள்ள ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்து சென்று தங்க வைத்தார்.

அப்போது அரசு என்ஜினீயரான ஹர்பஜன் என்பவரை அந்த ஓட்டல் அறைக்கு வரவழைத்தனர். அன்று இரவு மோனிகாவுடன் ஹர்பஜன்சிங் உல்லாசம் இருக்கவைத்து அதை ஆர்த்தியும், ரூபா என்ற பெண்ணும் ரகசியமாக வீடியோ எடுத்தார். பின்னர் இந்த வீடியோவை காட்டி ஹர்பஜன்சிங்கிடம் சுமார் ரூ.3 கோடி பணம் கேட்டு மிரட்டினார்கள். இந்த விஷயத்தை யாரிடமும் சொன்னால் பெரும் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என்று மோனிகாவையும் மிரட்டினார்கள். இதுபற்றி முழுமையான தகவல்களை திரட்டிய போலீசார் தொடர்ந்து விசாரித்ததில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், 8 முன்னாள் அமைச்சர்கள் என சுவேதா ஜெயின் வலையில் சிக்கியது தெரியவந்தது. 

இன்னும் ஏராளமான அதிகாரிகள், அரசியல் புள்ளிகள் ஆகியோரும் செக்ஸ் வலையில் சிக்கியுள்ளனர். பெரும்பாலும் கல்லூரி பெண்கள் தான் இவர்களின் செக்ஸ் விருந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரிகிறது. சுவேதா கல்லூரி மாணவிகளை அவர்களின் உல்லாசத்துக்கு விருந்தாக்கியது தெரியவந்துள்ளது. விபசார அழகிகளை நிரந்தரமாக தன்னுடன் வைத்திருந்தார். அவர்களையும் ஆங்காங்கே அரசியல் தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். 

சுவேதா ஜெயினிடம் இருந்து ஏரளாளமான செக்ஸ் வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதிகாரிகள் அரசியல் தலைவர்கள், பெண்களேடு இருப்பதை வீடியோ எடுத்து  வைத்துள்ளார்.  கல்லூரி மாணவிகளை அனுப்பிய அடுத்த நிமிடமே தனியாக வீடியோ ஈடுக்க ஒரு டீம் செயல்படுமாம், அதாவது ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு மாணவிகளை அங்கு அனுப்புவதற்கு முன்பாக அவர்கள் புக் பண்ணும் ரூமில் கேமராக்கள் பொருத்தி விடுவது, வெளியிலிருந்து விதவிதமாக விடிவை சூட் செய்ய என ஒரு நெட்வொர்க் வேலைபார்த்து தெரியவந்துள்ளது.

இந்த விசாரணையில் சுமார் 4000 வீடியோக்கள் இருந்தன, மத்தியபிரதேசம் மாநிலத்தையே உலுக்கிய உலுக்கியுள்ளது இந்த சம்பவத்தில் முக்கிய குற்றாலி உட்பட ஐந்து பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறதாம் தனிப்படை போலீஸ்.

Follow Us:
Download App:
  • android
  • ios