அமெரிக்காவின், சிகாகோவில் உள்ள, இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர், ருத் ஜார்ஜ், 19 வயதான  இவரது பெற்றோர், தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர்கள். 

பல ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவில் குடியேறினர்.இந்நிலையில், இலினாய்ஸ் பல்கலைக்கழக  விடுதியில் ரூத் ஜார்ஜ் தங்கி, படித்து வந்தார். கடந்த வெள்ளிகிழமை முதல், ரூத் ஜார்ஜ்ஜை தொடர்பு கொள்ள முடியவில்லை என, பல்கலைக்கழக  போலீசாரிடம், அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், ரூத் ஜார்ஜின் 'மொபைல் போன்', பல்கலைக்கழகத்தின்  கார் நிறுத்துமிடத்தை காட்டியது. அங்கு சென்று பார்த்தபோது, தனது காரின் பின் 'சீட்'டில், மாணவி ருத் ஜார்த் இறந்து கிடந்தார்.

பிரேத பரிசோதனையில், அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் கழுத்து நெறித்து கொல்லப்பட்டது தெரிய வந்தது.அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை, போலீசார், சோதனையிட்டனர். 

அப்போது, கடந்த சனிக்கிழமை அன்று, ரூத் ஜார்ஜ், கார் நிறுத்துமிடத்திற்கு சென்றதும், அவரை பின் தொடர்ந்து, ஒரு இளைஞர் சென்றதும், தெரியவந்தது.கைதுஅவரை சிகாகோ 'மெட்ரோ' ரயில் நிலையத்தில், போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், ருத் ஜார்ஜை கொலை செய்ததை, அவர் ஒப்புக் கொண்டார். அவரது பெயர், டொனால்டு துர்மன், , என்றும், பல்கலைக்கழகத்துக்கும் அவருக்கும் தொடர்பு இல்லை என்றும், போலீசார் தெரிவித்தனர்.