Asianet News TamilAsianet News Tamil

டபுள்டக்கர் பேருந்தும் பால் டேங்கர் லாரியும் மோதி கோர விபத்து! 18 தூக்கிவிசப்பட்டு பலியான பரிதாபம்!

உன்னாவ் அருகே, லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் பால் டேங்கர் லாரியும், டபுள் டக்கர் பேருந்தும் மோதியதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் படுகாயமடைந்த 19 பேர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
 

In Unnao Bus collied with milk tanker 18 killed in accident dee
Author
First Published Jul 10, 2024, 9:39 AM IST | Last Updated Jul 10, 2024, 9:39 AM IST

பீகாரில் உள்ள மோதிஹாரியில் இருந்து டெல்லி நோக்கி பேருந்து சென்று கொண்டிருந்தது. கர்ஹா கிராமம் அருகே முன்னால் சென்று கொண்டிருந்த பால் டேங்கர் லாரி மீது, பேருந்து மோதியதாக கூறப்படுகிறது. வேகமாக மோதியதில் பேருந்து நசுங்கி, வாகனத்தில் இருந்து மக்கள் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறை மற்றும் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு, காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாணையில், பேருந்தின் அதிவேகமே காரணம் என தெரியவந்துள்ளது.

கோர விபத்து குறித்த தகவலறிந்த உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து X தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணப் பணிகளை விரைவுபடுத்துமாறு மாவட்ட அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தனியார் ஆம்னி பேருந்துகளை அலறவிடும் அரசு பேருந்து.. அசர வைக்கும் வசதிகள்.. என்னென்ன தெரியுமா?

விபத்து குறித்து தகவல் அறிந்த உ.பி., போக்குவரத்து துறை அமைச்சர் தயாசங்கர் சிங், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்த அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என தெரிவித்துள்ளார்.

CRIME : சென்னையில் 6000 ரவுடிகளுக்கு செக்.! பட்டியல் தயார்.! யார் எங்கே இருக்காங்க.? கமிஷனர் அதிரடி
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios