Asianet News TamilAsianet News Tamil

தண்ணீர் லாரியோடு ரூ.13 லட்சத்தை திருடிய வட மாநில இளைஞர்கள்! ஓனருக்கே வீடியோ அனுப்பி கெத்து காட்டிய திருடர்கள்

வாட்டர் கேன் நிறுவனத்தில் பணிக்கு நியமிக்கப்பட்ட இரண்டு வடமாநில இளைஞர்கள், பணியில் சேர்ந்த 15 நாட்களில் லாரி மற்றும் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

In Tiruppathur Northern youths steal water truck  Excitement as the video was released
Author
Tiruppattur, First Published May 18, 2022, 11:22 AM IST

தமிழகத்தில் படையெடுக்கும் வட மாநிலத்தவர்

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வட மாநில இளைஞர்களின் ஆதிக்கம் அதிகரித்து காணப்படுகிறது. கட்டிடம் கட்டும் பணியாக இருந்தாலும் சலூன் கடையாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் வட மாநில இளைஞர்கள் பண்யாற்றி வருகின்றனர். தங்கள் மாநிலங்களை விட தமிழகத்தில் அதிக அளவு ஊதியம் கிடைப்பதால் தமிழகத்தை நோக்கி வட மாநில இளைஞர்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வகையில் வட மாநில இளைஞர்களுக்கு நம்பி வேலை கொடுக்கும் நிலையில் பல இடங்களில் பணத்திற்காக கொலை மற்றும்  கொள்ளையில் ஈடுபடும் சம்பவம் அதிகரித்துள்ளது. இது போன்ற ஒரு சம்பவம் தான் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளது.

In Tiruppathur Northern youths steal water truck  Excitement as the video was released

தண்ணீர் லாரி நிறுவனத்தில் வட மாநில இளைஞர்கள்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் சுமார் 15 வருடங்களாக கோபி என்பவர் ஏ.ஆர்.ஜி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் நிச் மற்றும் டெல்டா என்கிற பெயர்களில் ஆர்.ஓ குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்வதற்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டதால் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ளார். இதனை அறிந்த வட மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித் மற்றும் நிர்மல் எனும் 2  இளைஞர்கள் கடந்த மாதம் 27ஆம் தேதி தங்களுக்கு வேலை வேண்டும் என்று கூறி கோபிக்கு போன் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கோபியும் அவர்களை அழைத்து அவர்களுடைய ஆதார் அட்டை மற்றும் புகைப்படங்களை தரவேண்டும் என்கிற நிபந்தனையுடன்  வேலைக்கு அமர்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி தண்ணீர் கம்பெனியிலேயே அவர்கள் தங்க வசதி ஏற்படுத்தி உள்ளார் கோபி, ஆனால் இதுவரை அடையாள அட்டை ஆதாரங்களையும் புகைப்படங்களையும் கொடுக்காமல்  வட மாநில இளைஞர்கள் கொடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். 

In Tiruppathur Northern youths steal water truck  Excitement as the video was released

லாரி ஓனருக்கே வீடியோ..

இந்தநிலையில் கடந்த 15 ஆம் தேதி  இருவரும்  தண்ணீர் கம்பெனியில் இருந்த பிக்கப் வாகனம் மற்றும் இதர வாகனங்களில் இருந்த டீசல் 50 லிட்டர் ரொக்கப் பணம் சுமார் 2 லட்சம் ரூபாய்,  50ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்டீல் சாமான்கள், ஒரு சிலிண்டர், எல்இடி டிவி என அனைத்து பொருட்களையும்  திருடிக் சென்றுள்ளனர்
வழக்கம் போல காலை வேலைக்கு வந்த ஊழியர்கள் கம்பெனியின் சாவி வெளியே வீசப்பட்டு இருந்ததை அறிந்து மேலாளர் கோபிக்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக கம்பெனிக்கு வந்த கோபி திருடு போன சம்பவம் அறிந்து அதிர்ச்சி அடைந்து நாட்றம்பள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவித்து புகார் கொடுத்ததின் அடிப்படையில் நாட்றம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலை தேடி வந்த வடமாநில இளைஞர்கள்   வாகனம் உட்பட சுமார் 13 லட்சம் ரூபாய் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் முதலாளியான கோபிக்கு,  நிர்மல் வண்டி ஓட்ட மஞ்சித் வீடியோ எடுத்து நான் பீகாரை நோக்கி செல்கிறேன் எங்களை  எந்த போலீசாரும் எதுவும் செய்ய முடியாது என்று வீடியோ பதிவு செய்து தனது முதலாளியான கோபிக்கு அனுப்பி உள்ளார். இதனை பார்த்த கோபி அதிர்ச்சி அடைந்து இந்த வீடியோ காட்சிகளோடு மீண்டும் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதைனயடுத்து போலீசாரும் குற்றவாளிகளை கைது செய் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios