Asianet News TamilAsianet News Tamil

இவன் அப்பனா இல்ல மிருகமா.? மனைவியுடன் ஏற்பட்ட சண்டையில் 8 வயது மகனை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்.

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக எட்டு வயது மகன் மீது தந்தையே பெட்ரோல் ஊற்றி தீ  வைத்து எரித்துள்ளனர் கொடூரம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி வடமலை பேட்டையில் இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

In Tirupati, the father burnt the child due to a problem with his wife.
Author
Tirupati, First Published Jul 12, 2022, 8:24 PM IST

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக எட்டு வயது மகன் மீது தந்தையே பெட்ரோல் ஊற்றி தீ  வைத்து எரித்துள்ளனர் கொடூரம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி வடமலை பேட்டையில் இச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கணவன் மனைவிக்கு இடையே ஏற்படுகிற சண்டையில் அதிக அளவில் பாதிக்கப்படுவது அவர்களின் குழந்தைகளாகத்தான் இருக்கும். விவாகரத்து ஆனாலும் சரி குடும்பத் தகராறில் ஏற்படும் சரி, கொலை தற்கொலை ஆனாலும் சரி குழந்தைகளே அதில் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர். தம்பதிக்கு இடையில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் தங்கள் குழந்தைகளுக்காக அதை அனுசரித்து செல்ல வேண்டுமென்ற பக்குவம் காலப்போக்கில் குறைந்து வருவதே இதற்கு காரணம். இதன் விளைவாக எந்தப் பாவமும் அறியாத குழந்தைகள் பெற்றோர்கள் செய்யும் தவறால் தண்டிக்கப்படும் அவலம் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவன் தனது 8 வயது மகன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து உள்ள சம்பவம் நடந்துள்ளது. 

இதையும் படியுங்கள்: கடனை கட்டு, இல்ல போட்டோவ நிர்வாணமா போட்டு நாரடிச்சிடுவோம்.. டார்ச்சர் தாங்கமுடியாமல் பெண் தற்கொலை.

In Tirupati, the father burnt the child due to a problem with his wife.

முழு விவரம் பின்வருமாறு:- திருப்பதி வடமலை பேட்டை மண்டலம் பட்டிகண்டிரிகாவைச்  சேர்ந்தவர் ரமேஷ் (42) அதே ஊரைச் சேர்ந்த ஐஸ்வர்யா (32) என்பவரை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர் ரேணிகுண்டா அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்,  மகேஷ் ( 8 ) ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார், மற்றொரு குழந்தை வீட்டில் உள்ளது. திருமணம் ஆனதிலிருந்து தம்பதியினர் அடிக்கடி சண்டையிட்டு வந்துள்ளனர். இதனால் ரமேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். 

இதையும் படியுங்கள்: கள்ளகாதலியோடு உல்லாசம்.. தட்டிக்கேட்ட பெண்ணின் தந்தை - கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி !

இதனால் மனநிலையும் சிறித பாதிக்கப்பட்டதாக தெரிகிறது, இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, அப்போது மனைவியை அவர் கடுமையாக தாக்கி உதைத்தார், அதில் மனைவியின் கை முறிந்தது. இதனால் அருகிலுள்ள ஈசுலாபுரத்தில் கை கட்டுப்போட்டுக் கொண்டு அவர் தனது தாய் வீட்டிற்கு சென்றார். பின்னர் கணவர் அவரை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை  வீட்டில் மனைவி சமைக்கவில்லை எனக்கூறி ரமேஷ் மீண்டும் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டார்.

கை உடைந்துள்ள நிலையில் எப்படி சமைப்பது என மனைவி கேட்க, அதில் ஆத்திரமடைந்த ரமேஷ் மீண்டும் ஐஸ்வர்யாவை தாக்கினார். இதில் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் ரமேஷின் தாயார் கோபத்தில் தனது மருமகள் ஏதாவது செய்து கொள்வார் என காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார், உடனே போலீசார் அவரை அழைத்து காவல் நிலையத்தில் வைத்து கவுன்சிலிங் கொடுத்தனர், மனைவி காவல் நிலையம் சேன்றிருப்பதை அறிந்த ரமேஷ், அச்சம் அடைந்ததுடன் மகனுக்கு உடல்நிலை சரியில்லை அதனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக போலீசிடம் பொய் கூறியுள்ளார்.

In Tirupati, the father burnt the child due to a problem with his wife.

பின்னர் அதை நம்ப வைப்பதற்காக உண்மையிலேயே மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார், மகளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் வழியில் பெட்ரோல் வாங்கியதாகவும், அப்போது வீட்டில் வந்து பார்த்தபோது மனைவி இல்லாததால் அந்த ஆத்திரத்தில் சிறுவன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாகவும் கூறியுள்ளார். இந்நிலையில்  பலத்த காயமடைந்த 8 வயது சிறுவனை மகேஷ் திருப்பதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios