Asianet News TamilAsianet News Tamil

ஓயின் குடித்தால் அது வருமா.! மூக்கு பிடிக்க குடித்து மப்பு ஆனா அரசுப் பள்ளி மாணவிகள். பொது இடத்தில் அசிங்கம்.

அரசு பள்ளி மாணவிகள் மது குடித்தால்  ' கலர் ' ஆகலாம் என எண்ணி அளவுக்கு மீறி குடித்து பேருந்து நிலையத்தில் போதையில் விழுந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

In Karur, 3 schoolgirls became intoxicated after drinking wine in a public place.
Author
Karur, First Published Aug 11, 2022, 5:43 PM IST

அரசு பள்ளி மாணவிகள் மது குடித்தால்  ' கலர் ' ஆகலாம் என எண்ணி அளவுக்கு மீறி குடித்து பேருந்து நிலையத்தில் போதையில் விழுந்த கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் இந்த அவலம் அரங்கேறியுள்ளது. 

திரும்பிய பக்கமெல்லாம்  போதை  வஸ்துக்களால் இளையோர் முதல் பெரியோர் வரை நிலைகெட்டு திரியும் அவலம்  ஏற்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் முதல் பள்ளி மாணவிகள் வரை மது பழக்கத்திற்கு அடிமையாகி ஆங்காங்கே பொது இடங்களில் தள்ளாடும் காட்சிகள் வீடியோவாக வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசு போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் போதையை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

In Karur, 3 schoolgirls became intoxicated after drinking wine in a public place.

போதை விவகாரத்தில் சமரசம் செய்தால் காவல்துறை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். மேலும் போதை விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இது ஒருபுறம் தீவிரமாக நடந்து வரும் நிலையில் கரூரைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மூவர், பள்ளிச் சீருடையில் பொது இடத்தில் மது போதையில் மயங்கி கிடந்துள்ள சம்பவம் நடந்துள்ளது. கரூர் சர்ச் கார்னர் அருகே 3 மாணவிகள் போதையில் தன் நிலையை மறந்து தள்ளாடிக் கொண்டு இருந்தனர்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மாணவிகளுக்கு ஏதோ உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என எண்ணி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஆம்புலன்சை கண்டதும் சுதாரித்துக்கொண்ட  அதில் இருந்த ஒரு மாணவி அங்கிருந்து விலகிச் சென்றார். இரண்டு மாணவிகள் தலைக்கேறிய போதையில் அங்கேயே மயங்கி மயங்கி நின்றனர். பின்னர்தான் மாணவிகள் போதையில் தள்ளாடுவது அங்கிருந்தவர்களுக்கு தெரிந்தது. பின்னர் மாணவிகள் இருவரையும் ஆம்புலன்சில் ஏற்றி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

பின்னர் மாணவிகளின் முகத்தில் தண்ணீர் தெளித்து போலீசார் அவர்களிடம்  விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. அந்த மாணவிகள் 3 பேரும் கரூர்  மாநகராட்சிப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து  வருவதாகவும்,மூவரும் தோழிகள் என்றும், தேர்வில் தோல்வி அடைந்ததால் தேர்வு எழுதுவதற்காக வேறொரு பள்ளிக்கு சென்று வந்தபோது, தேர்வு  எழுதி முடித்த மகிழ்ச்சியை கொண்டாட வேண்டுமென முடிவு செய்ததாகவும், அப்போது ஒயின் குடித்தால் கலர் வரும், மேனி பளபளக்கும் என யாரோ சொன்னதை வைத்து ஒயின் குடிக்கும் முடிவு செய்ததாகவும், பின்னர்  மூவரும் சேர்ந்து ஒயின் குடித்ததாகவும் கூறினர்.

In Karur, 3 schoolgirls became intoxicated after drinking wine in a public place.

ஆனால் போதை தலைக்கேறியதால் தங்களால் வீட்டிற்கு செல்ல முடியாமல் வழியிலேயே மயங்கியதாகவும் அவர் கூறி போலீசிடம் கதறினர். பின்னர் போலீசார் அவர்களின் பெற்றோரை காவல்நிலையம் வரவழைத்து பின்னர் அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். மாணவிகளின் இந்த செயலால்  இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios