பார்க்கும் போதெல்லாம் தொடர்ந்து பைத்தியம் என கூறி வந்த அத்தையை நடுரோட்டில் வைத்து மருமகன் மானபங்கம் செய்து வெட்டிக் படுகொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. 

பார்க்கும் போதெல்லாம் தொடர்ந்து பைத்தியம் என கூறி வந்த அத்தையை நடுரோட்டில் வைத்து மருமகன் மானபங்கம் செய்து வெட்டிக் படுகொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் இல் கொடூரம் அரங்கேறியுள்ளது.

திட்டமிட்டு நடக்கும் கொலைகளை காட்டிலும், உணர்ச்சிவயத்தால் நடக்கும் கொலைகளே அதிகம் என்று சொல்லலாம், இந்த வரிசையில் தன்னைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வந்த அத்தையை மருமகன் வெட்டிக்கொலை செய்துள்ளார். முழு விவரம் பின்வருமாறு:- சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் ரத்தன்பூர் கரைஹாபராவைச் சேர்ந்தவர் சுரேகா பட்லே, இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் அவர் கூலி வேலை செய்து குழந்தைகளை காப்பாற்றி வந்தார்.

இந்நிலையில் இவருக்கு மருமகன் முறையாகும் பிந்து என்ற முகேஷ்வுடன் அத்தை என்ற வகையில் சோரேக சகஜமாக பேசுவதுண்டு, அவ்வப்போது கேலியாக தனது சுரேகா முகேஷை பைத்தியக்காரன் என கூறி வந்துள்ளார். அத்தை அடிக்கடி இப்படி கூறுவது சில நேரங்களில் முகேஷுக்கு கோபத்தை ஏற்படுத்தியது, இதுபோல் முகேஷ் ஏற்கனவே பலரிடமும் வாண்டடாக வம்பிழுத்து, வன்முறை செய்யக்கூடியவராக இருந்து வந்துள்ளார். எனவே அவர் மீது பலரும் காவல் நிலையத்தில் பல பிரச்சினைகளுக்காக புகார் கொடுத்துள்ளனர். மொத்தத்தில் முகேஷ் அந்த ஏரியாவில் ஒரு ரவுடியாகவே வலம் வந்துள்ளார்.

இந்நிலையில் வழக்கம் போல அத்தை சுரேகா பொதுக் குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த முகேஷ் எப்போதும்போல பைத்தியம் என கூறியதாக தெரிகிறது. அதில் ஆத்திரம் அடைந்த முகேஷ் அந்தப் பெண்ணை நடுரோட்டில் வைத்து மானபங்கப்படுத்தியதுடன், தன் கையில் வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து முகேஷ் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தலைமறைவானார். இந்த படுகொலையால் கொந்தளித்த அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் உறவினர்கள், ஊர் மக்களை அடிப்ப, மிரட்டுவது துஷ்பிரயோகம் செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வரும் முகேஷ் மீது ஏற்கனவே எழுத்துப்பூர்வமாக காவல்நிலையத்தில் பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் போலீசார் அவரை முன்கூட்டியே கைது செய்யவில்லை, இப்போது ஒரு பெண் அவரால் உயிரிழந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு 3 குழந்தைகள் உள்ளனர், அந்த குழந்தைகள் இப்போது நிராகதியாக நிற்கின்றனர். அனைத்திற்கும் காவல்துறை தான் காரணம் எனக்கூறி ரதன்பூர் காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, பின்னர் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனையடுத்து அத்தையை கொலை செய்துவிட்டு வனப்பகுதியில் மறைந்திருந்த முகேஷை போலீசார் கைது செய்தனர்.