25 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு  பெண்ணின் ஆடைகளை கலைந்து அவரை நிர்வாணமாக்கி  காரிலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  ஹைதராபாத் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ,  வெளிநாட்டுப் பெண்ணை தங்களது காமவெறிக்கு மூன்று பேர் கொண்ட கும்பல்  இறையாக்கியுள்ள  சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  கடந்த ஜனவரி 16ஆம் தேதி அதிகாலை பெங்களூர் டோட்டபுல்லாரபுர  சாலையில் கார் ஒன்று வேகமாக வந்தது  திடீரென ஓரங்கட்டப்பட்ட அந்த காரிலிருந்து நிர்வாணமான நிலையில் பெண் ஒருவர் தூக்கி வீசப்பட்டார் . 

பின்னர் அந்த கார் மின்னல் வேகத்தில் அங்கிருந்து புறப்பட்டது சாலையில் விழுந்த அந்த பெண் உடலில் ஏகப்பட்ட காயங்கள் இருந்தது .  தட்டுத்தடுமாறி எழுந்து அந்த பெண் அருகிலிருந்த அருகில் இருந்த பண்ணை வீட்டிற்கு நடந்து சென்று தனக்கு நேர்ந்த வற்றைக் கூறினார் ,  பின்னர் அங்கிருந்தவர்கள் கொடுத்த ஆடையை உடுத்திக் கொண்ட அவர்,   அங்கிருந்து காவல் நிலையம் சென்று தனக்கு நேர்ந்தவைகளைக் கூறி  காவல் நிலையத்தில்  புகார் கொடுத்தார் .  புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்தப் பெண்ணிடத்தில் விசாரித்தனர்  அதில் ,  அவர்  கிழக்கு ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர் என்றும் சிறுநீரக கல் சிகிச்சைக்காக டெல்லி வந்ததாகவும் ,  பின்னர் அங்கிருந்து பெங்களூரு வந்த தனக்கு இப்படி ஒரு சம்பவம் நேர்ந்துவிட்டது என்றும் அந்தப்பெண் தெரிவித்திருக்கிறார்.

பெங்களூரு வந்தபோது ஒரு டாக்ஸி புக் செய்து அதில் ஏறியபோது,  அதில்  ஏற்கனவே  இருந்த 3 வாலிபர்கள் தம்மை  நிர்வாணப்படுத்தி தம்மை வன்புணர்வு செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார் .  அத்துடன் அந்த மூன்று வாலிபர்களும் தன்னிடமிருந்த செல்போன், நகை, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு  நிர்வாணமாக்கி சாலையில் தூக்கி எறிந்ததாகவும் அந்தப்பெண்  தெரிவித்துள்ளார் . இதில்  வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அந்த பெண்ணை நிர்வாணமாக விடவேண்டிய நோக்கம் என்ன,  ஏன் அந்தப் பெண் மூன்று பேர் இருக்கும் டாக்ஸியில் ஏறினார்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர் .