இந்தியாவின் மெட்ரோ சிட்டிகளில் ஒன்றானஐடி நிறுவனங்களின் தலைநகரமான  பெங்களூரு  வாராவாரம் மது விருந்து கலாச்சாரம் நடந்து வருகிறது. அதிலும் பப்களும், ஸ்டார் ஓட்டல்களும் இருந்துள்ள பகுதியான எம்ஜி ரோட்டில் வார இறுதி நாளில் கோலாகலமாக இருக்கும்.

அப்ளிகேஷன் ஒன்றில் வேலை பார்த்து வந்து பவன், சாப்ட்வேர் கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வந்துள்ள இவரது தோழி வேதா  மற்றும் நண்பர்கள் எம்ஜி ரோடு உள்ள BEiR பப்பிவிற்கு வார இறுதி நாளில் சென்றனர்.  சுமார் 11 மணி அளவில் பவன் மற்றும்  அவரது தோழி காதலி வேதாவுடன் பார்ட்டியை முடித்துவிட்டு நடந்து வந்துள்ளார். 

அளவுக்கு அதிகமான மது போதையில் தள்ளாடி கொண்டு வந்திருந்த அவர், இரண்டாவது தளத்தில் போர்டிகோ பகுதியில் பெரிய இடைவெளி இருந்துள்ளது. இதைப் கவனிக்காமல் ஒருவர் பின் ஒருவர் பின்தொடர்ந்து வந்துள்ளனர். அப்போது வேதா மற்றும் பவன் வழுக்கி விழுந்தனர். இதனால் நேராக தரை தளத்தில் சென்று தலை கீழாக விழுந்துள்ளனர்.  

இந்த சம்பவத்தில் அவனின் காதலி வேதா பரிதாபமாக பலியானார். துடிதுடித்துக் கொண்டிருந்த பவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு பவுரிங் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நள்ளிரவு முதல் அதிகாலை வரை நடந்த தீவிர சிகிச்சையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் கப்பன் பார்க் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து அபிஷேக் மற்றும் பப் மேனேஜர் மணி ஆகியோருக்கு எதிராக 304 பிரிவின் கீழ் வழக்கு செய்துள்ளனர்.