கள்ளக்காதல் விவகாரத்தில் தாய் அபிராமி பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை குன்றத்தூரில் பெற்ற பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு நாகர்கோவிலுக்கு தப்பிய காமக்கொடூர பெண்ணையும், பிரியாணி கடையில் வேலைபார்த்த கள்ளக் காதலனையும் போலீசார் அதிடியாக கைது செய்துள்ளனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தைகளின் தாய் பரபரப்பு அபிராமி வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் இரு குழந்தைகளுக்கும் பாலில் விஷம் கலந்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல், எங்கே அவர்கள் விஷத்தில் சாகாமல் உயிர் பிழைத்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் அக்குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 

சென்னை குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வரும் வங்கி ஊழியர்  விஜய்க்கு அபிராமி என்ற மனைவியும், அஜய் என்ற மகனும் காருண்யா என்ற மகளும் இருந்தனர். கடந்த சில நாட்களாகவே கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. மாதம் தொடக்க என்பதால் பணிச்சுமை காரணமாக வங்கியில் இருந்து வீடு திரும்ப தாமதமானது. சனிக்கிழமை அதிகாலை வீட்டிற்கு சென்ற விஜய், வெளிப்புறமாக தாழிடப்பட்டிருந்த கதவை திறந்து உள்ளே சென்றார்.

அப்போது அவரது மகனும் மற்றும் மகளும் வாயில் நுரைதள்ளிய நிலையில் சடலமாக கிடந்தனர். மனைவி அபிராமியை காணவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டபோது செல்போனை அவர் எடுக்கவில்லை. விஜய்யின் அழுகை சத்தம் கேட்டு கூடிய அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். முதற்கட்ட விசாரணையில் அபிராமிக்கு நெருக்கமான பிரியாணி கடையில் வேலை பார்த்து வந்த சுந்தரம் என்பவரை போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கணவன் மற்றும் குழந்தைகளுக்கு பாலில் விஷம் வைத்து கொலை செய்ய அபிராமி திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கணவர் விஜய் வீட்டிற்கு வர தாமதமானதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஆனால் குழந்தைகளுக்கு மட்டும் விஷம் கலந்த பாலை கொடுத்தது மட்டுமல்லாமல் குழந்தை கழுத்தை நெறித்தும் கொலை செய்தார். பிறகு வீட்டில் இருந்த ஸ்கூட்டியில் கோயம்பேடு சென்று அங்கிருந்து நாகர்கோவிலுக்கு தப்பிக்க வைத்துள்ளார். 

அபிராமி கேரளா சென்றதும், ஒரு சில நாட்கள் கழித்து, தாமும் கேரளாவுக்குச் செல்ல முடிவு செய்த சுந்தரம், ஸ்கூட்டியை கோயம்பேட்டிலேயே விட்டு சென்றுவிட்டார். பிறகு மீண்டும் பிரியாணி கடையிலேயே வேலைபார்த்துள்ளார். அபிராமியின் வீட்டில் இருந்து விஷபாட்டில் மற்றும் விஷம் கலந்த பால் ஆகியவற்றை சேகரித்த தனிப்படை போலீசார், கோயம்பேட்டில் அனாதையாக நின்ற அபிராமியின் ஸ்கூட்டியையும் கைப்பற்றினர். பிறகு சுந்தரத்தை பிடித்து விசாரித்த போது அவர் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் நாகர்கோவிலுக்கு விரைந்தனர். 

பிறகு செல்போன் சிக்னலை வைத்து அவரை மடக்கி பிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில், 'பாலில் விஷம் கலந்து கொடுத்த பின்னர் குழந்தைகள் உயிர் தப்பிவிடுவார்கள் என என்ற அச்சத்தில் அவர்களின் கழுத்தை நெரித்து கொன்றேன் என்றும் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த சில வருடங்களாக கள்ளக்காதல் விவகாரத்தால் பெற்ற குழந்தை மற்றும் கணவரை கொலை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.