அதிகாலையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிகாலையில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமதாஸ் (49). இவருடைய மனைவி நீலாவதி (43). இவர்களுக்கு 18 வயதில் மகன் இருக்கிறார். வீட்டின் கீழ் தளத்தில் ராமதாஸ் மரக்கடை நடத்தினார். மேல்தளத்தில் குடும்பத்துடன் வசித்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நீலாவதியின் நடத்தையில் ராமதாசுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 

இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து ராமதாஸ் தனது மனைவியை விட்டு பிரிந்து மேல ஆசாரிபள்ளத்தில் உள்ள தனது பூர்வீக வீட்டில் குடியேறினார். மகனை, மனைவியுடன் விட்டு செல்ல மனமில்லாமல் அவரை தன்னுடனேயே அழைத்துச் சென்று விட்டார். நீலாவதி மட்டும் வசந்தம் நகரில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். இந்நிலையில், லீலாவதிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இதனிடையே, அதிகாலையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்துவிட்டு வீடு திரும்பிய போது தாய் வீட்டில் லைட் எரிவதை பார்த்த மகன் அங்கு சென்று பார்த்துள்ளார். அங்கு தாய் ஒருவருடன் உல்லாசமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அஜித் தந்தையிடம் கூறி மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராமதாஸ், மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தார். இதனையடுத்து, போலீசில் கணவரே சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.