தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமார். இவரது மனைவி கலையரசி . இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு  13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கலையரசி சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

அதே ஊரை சேர்ந்தவர் வடிவேல் . கூலித்தொழிலாளியான  இவருக்கு சவுந்தர்யா என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் கலையரசிக்கும், வடிவேலுவுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையறிந்த ஜெயக்குமார் கலையரசியை கண்டித்துள்ளார். ஆனால் கலையரசி வடிவேலுவுடனான கள்ளத் தொடர்பை கைவிட வில்லை. இதையடுத்து கலையரசியை ஜெயகுமார் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன்பு கலையரசியும், வடிவேலும் தங்களது குழந்தைகளை விட்டுவிட்டு ஊரை விட்டு  ஓடிவிட்டனர். அவர்கள் இருவரையும் உறவினர்கள் தேடி வந்தனர். இதையடுத்து அவர்கள்  இருவரும் கிழக்கு கடற்கரை சாலை அருகில் உள்ள வயலில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

இதைக் கண்ட பொதுமக்கள் அருகில் சென்று பார்த்த போது வடிவேலு இறந்து விட்டதும், கலையரசி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கலையரசி மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

இதுபற்றி தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதல் பெற்ற பிள்ளைகளைக் கூட மறக்கச் செய்துவிடுகிறது. தற்போது கள்ளக் காதலர்களின் பிள்ளைகள் நிர்கதியாக் நிற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.