மேலூர் அருகே வீட்டை விட்டு ஓடிய கள்ளக்காதலர்களை 6 பேர் கொண்ட கும்பல் பட்டப்பகலில் நடுரோட்டில் சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெருவை சேர்ந்தவர் விமல். இவரது மனைவி ஆயம்மாள் (28) இவர்களுக்கு 2 ஆண் ,ஒரு பெண் குழந்தைகள் உள்ளன. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து கடந்த சில மாதங்களாக ஆயம்மாள் தாய் வீட்டில் வசித்து வந்தார். அதே ஊரை சேர்ந்தவர் அன்புதான்(30). சில ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்துள்ளார். இவருக்கும் ஆயம்மாளுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் இருக்கும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று முன் 2 பேரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். குடும்பத்தினர், உறவினர்கள் அவர்களை தேடி வந்தனர். நேற்று காலை அருகே உள்ள கிராமத்தில் தங்கி இருந்த அவர்களை கண்டுபிடித்து  உறவினர்கள் அழைத்து வந்தனர். அப்போது, திருவாதவூர், ஆண்டிப்பட்டி அருகே நடுரோட்டில் ஆயம்மாளையும், அன்புநாதனையும் இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட வழிமறித்தனர். பின்னர், 6 பேரும் இருவரையம் சரிமாரியாக வெட்டினர். இதில், இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். கொலை செய்த கும்பல் சாவகாசமாக அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். 

உடனே இது தொடர்பாக மேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆயம்மாளின் சகோதரர் மற்றும் உறவினர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம்  என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். பட்டப்பகலில் கள்ளக்காதல் ஜோடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.