தனது கள்ளக்காதலனை விட்டுக் கொடுக்க முடியாது என இரண்டாவது மனைவி கூறியதால் ஆத்திரமடைந்த கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை, எம்.கே.பி நகரைச் சேர்ந்தவர் சார்லஸ். இவருக்கும் பவித்ரா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. ஆனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் சார்லஸ், ரமணி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ரமணிக்கும் சார்லஸுக்கும் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்த நிலையில், திடீரென ரமணிக்கு ஒரு கள்ள காதலன் இருப்பது சார்லஸ்க்கு தெரியவந்தது. இதனால் ரமணியை சார்லஸ் கண்டித்துள்ளார். ஆனால் ரமணியோ, ‘தனது கள்ளக்காதலன் தான் எனக்கு உண்மையான புருஷன். அவரை விட்டு கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த சார்லஸ், ரமணியை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சார்லஸை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். கருத்து வேறுபாட்டால் முதல் மனைவி பிரிந்த நிலையில் இரண்டாவது மனைவியும் கள்ள காதலனையும் விட்டுத்தர முடியாது என்று கூறியதால் அவரை கொலை செய்துவிட்டு தற்போது சிறையில் கம்பி எண்ணும் பரிதாப நிலைக்கு சார்லஸ் தள்ளப்பட்டு உள்ளார்.