கள்ளக்காதல் விவகாரத்தில் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் தனியாருக்கு சொந்தமான நவீன அரிசி ஆலை உள்ளது. இங்கு ஒடிசா மாநிலம் நபராம்பூரைச் சேர்ந்த ராகுல் (26) என்பவரும், அவருடைய மனைவி பூஜாவும் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். 

இதே அரிசி ஆலையில் கிருஷ்ணா(28) என்பவரும் வேலை செய்து வந்தார். இதற்கிடையில் ராகுலின் மனைவி பூஜாவுக்கும், கிருஷ்ணாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த விவகாரம் அறிந்த ராகுல், கள்ளக்காதலை கைவிடும்படி தனது மனைவி மற்றும் கிருஷ்ணாவை பலமுறை கண்டித்தார். ஆனாலும் பூஜாவுடனான கள்ளக்காதலை கிருஷ்ணா கைவிடவில்லை. தொடர்ந்து அவருடன் பழகி வந்தார்.

 இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல், கத்தியால் கிருஷ்ணாவை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் துடிதுடித்து உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.  இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கிருஷ்ணா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான ராகுலை  தேடி வருகின்றனர்.