அண்ணியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த உறவினரை பொதுமக்கள் மத்தியில் சரமாரி வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மஜீதியா தெருவில் வசிப்பவர் அப்துல்கனி. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் அஷ்ரப் அலி. உறவினர்களான இவர்கள் மலேசியாவில் வேலை செய்து வந்தனர். கொரோனோ காலத்தில் இவ்விருவரும் சொந்த ஊருக்குத் திரும்பினர். அப்துல் கனிக்கும் அவருடைய அண்ணிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனால் அப்துல் கனிக்கும் அஷ்ரப் அலிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல் கனியின் அண்ணி அஷ்ரப் அலிக்கு அத்தை முறை.


 

இதையும் படிங்க;- எங்க அண்ணி டிரஸ்ஸே இல்லாம எவ்வளவு அழகாக இருக்கா பாரு... செல்போனில் ஆபாச படம் காட்டிய கணவர்... மனைவி எடுத்த விபரீத முடிவு..!


இதனால் தன் அத்தையுடன் கள்ளத்தொடர்பை விட்டுவிடுமாறு அப்துல்கனியிடம் அஷ்ரப் அலி எச்சரித்துள்ளார். ஆனால், அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இருவருக்கும் இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய அப்துல்கனி தஞ்சையில் சுற்றி வருவதாக அஷ்ரப் அலிக்கு தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் நேற்று அதிகாலை ஒன்றரை மணியளவில் அப்துல் கனி தஞ்சை புதிய பேருந்து நடிலையத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த அஷ்ரப் அலி இவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அஷ்ரப் அலி தான் வைத்திருந்த அரிவாளால் அப்துல் கனியை சரமாரியாக வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அப்துல் கனி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து, தப்பிக்க நினைத்த அஷ்ரப் அலியை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.