தியாகதுருகம் பகுதியில் உல்லாசமாக இருந்துவிட்டு வாலிபரை கழுத்தை நெரித்து கொன்ற பெண்ணை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

 கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (30) இவர் கள்ளக்குறிச்சி அடுத்த ரோடு மாந்தூர் பகுதியில் உள்ள ஸ்வீட் ஸ்டால் கடையில் பணியாற்றி வந்தார். கடந்த 28ம் தேதி தியாகதுருவம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராம ஏரி பகுதியில் மர்மமான முறையில் கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பழனிசாமி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், அவர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்நிலையில், தியாகதுருகம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் பழனிச்சாமி சம்பவத்தன்று இரவு பிரியாணி வாங்கி சென்றது சிசிடிவி காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது அவருடன் பெண் ஒருவர் உடன் சென்றுள்ளார். அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். அவர் உளுந்தூர்பேட்டை அடுத்த இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த கோமதி(37) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக இருந்த கோமதியை பிடித்து விசாரணை செய்ததில் பல ஆண்களடன் அவர் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. மேலும், பழனிசாமியை கொலை செய்ததையும் ஒப்புக்கொண்டார். 

அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்;- இறந்து போன பழனிசாமிக்கும் எனக்கும் நீண்ட நாட்களாக பழக்கம் இருந்து வந்தது. சம்பவத்தன்று இருவரும் இரவு நேரத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து தியாகதுருவம் வந்தோம். பழனிச்சாமி குடிபோதையில் இருந்தார். தியாகதுருவம் பகுதியில் உள்ள ஹோட்டலில் பிரியாணி வாங்கி சென்று பிரிதிவிமங்கலம் ஏரி பகுதியில் சாப்பிட்டுவிட்டு பின்னர் உல்லாசமாக இருந்தோம்.

பின்னர் பழனிச்சாமி குடிபோதையில் என்னை எட்டி உதைத்தார். இதனால் ஆத்திரமடைந்த நான் பழனிச்சாமியின் கழுத்தில் துணியால் நெரித்து கொலை செய்து விட்டு அவர்டமிருந்த செல்போன், மற்றும் ரூ.3,500 பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டேன் என்று கூறியுள்ளார். பல்வேறு பகுதிகளில் இளைஞர்களுடன் உல்லாசமாக இருந்துவிட்டு பணம் பறித்த வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.