திண்டுக்கல் அருகே கணவரை பிரிந்து வாழ்ந்த இளம்பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரத்தில் இளம்பெண் படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே கம்பிளியம்பட்டி நிலப்பட்டியை சேர்ந்த பிச்சைமணி மகள் திவ்யபாரதி (22). இவருக்கு 16 வயது இருக்கும் போதே பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஜெயக்குமாருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு இருகுழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திவ்யபாரதியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கணவரை பிரிந்த திவ்யபாரதி தனது தாயார் ஜெயமணியுடன் தங்கி குழந்தைகளை வளர்த்து வந்தார். 

வழக்கும் போல வேலைக்கு சென்ற திவ்யபாரதி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து, மறுநாள் காலையில் திவ்யபாரதி வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கூறப்பட்டது. அலறியடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள் இது தொடர்பாக போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர் அணிந்திருந்த நகைகள் அப்படியே இருந்ததால் நகைக்காக கொலை செய்யப்படவில்லை என்பது தெரியவந்தது. கள்ளக்காதல் பிரச்சனையில் கொலை நடைபெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில், செங்காட்டுப்பட்டியை சேர்ந்த பால் வியாபாரி ராமச்சந்திரனுக்கும் திவ்யபாரதிக்கும் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, ராமச்சந்திரனை பிடித்து போலீசார் விசாரித்ததில், திவ்யபாரதியை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். அதில், எனக்கும் திவ்யபாரதிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் இருவரும் உல்லாசமாக இருந்து வந்தோம். 

இந்நிலையில், எனக்கு ஏற்கனவே திருமணமாகி நந்தினி என்ற மனைவியும், 2 மகன்களும் இருப்பது தெரியவந்தது. இதனால், கொஞ்சம் கொஞ்சமாக விலக செல்ல ஆரம்பித்தால். மேலும் திவ்ய பாரதியை செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் இணைப்பு பிசியாக இருந்துள்ளது. இதனால் திவ்யபாரதி வேறு எந்த ஆணுடனும் தொடர்பு ஏற்பட்டு பேசிக்கொண்டிருக்கிறாரா என்று ராமச்சந்திரன் சந்தேகம் அடைந்ததால் அவளை கொலை செய்ததாக கூறியுள்ளார்.