உல்லாசத்துக்கு வர மறுத்த கள்ளக்காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதாக மிரட்டல் விடுத்த ஒர்க்‌ஷாப் உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவையை சேர்ந்த 32 வயது பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அந்த பெண் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சிட்கோவில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் வேலை பார்த்து வந்தார். அப்போது ஒர்க்‌ஷாப் உரிமையாளரான சந்திரனுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், அடிக்கடி இருவரும் உல்லாமாக இருந்து வந்துள்ளனர். 

அப்போது, இந்த பெண்ணுக்கு தெரியாமல் ஆபாச புகைப்படங்கள் மற்றும் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோக்களை  செல்போனில் எடுத்து வைத்தாக கூறப்படுகிறது. இந்நிலையில், இருவருக்கும் இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த பெண் வேலையை விட்டு நின்று விட்டார். ஆனால்,  சந்திரன் தொடர்ந்து பெண்ணை தொடர்பு கொண்டு உல்லாசத்துக்கு அழைத்து வந்துள்ளார். அதற்கு அந்த பெண் மறுப்பு  தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரம் அடைந்த சந்திரன், அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று நீ என்னுடன் உல்லாசத்துக்கு வர மறுத்தால் இருவரும் ஒன்றாக இருந்த போது எடுத்த ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண் கதறிய படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த  போலீசார் சந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.