எவ்வளவு சொல்லியும் கேட்காமல் நண்பன் மனைவியுடன் உல்லாசமாக இருந்ததால் கொலை.. விசாரணையில் பகீர்..!
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி(36). இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். அப்போது, கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது.
சிவகாசியில் கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்தவர் சுந்தரபாண்டி(36). இவர் சிவகாசியில் உள்ள சாம்பிராணி தயாரிக்கும் கம்பெனியில் லோடுமேனாக பணியாற்றி வந்தார். அப்போது, கம்பெனி முன்பு சுந்தரபாண்டி நின்று கொண்டிருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பியது.
ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள சாலையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளில் சாமுவேல், கண்ணன், சுருட்டை குமார், வீரபுத்திரன், குட்டை ஆனந்த் ஆகிய 5 பேரும் சேர்ந்து சுந்தரபாண்டியை கொலை செய்தது தெரியவந்தது.
இதில் வீரபுத்திரனை சிவகாசி கிழக்குப் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. எங்களது நண்பர் சந்திரன் என்பவரின் மனைவிக்கும், சுந்தரபாண்டிக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதுகுறித்து சந்திரன் எங்களிடம் கூறி கவலைப்பட்டார்.
இதனையடுத்து, நானும், சாமுவேல், கண்ணன், குட்டை ஆனந்த், சுருட்டைக்குமார் ஆகியோர் சேர்ந்து கள்ளக்காதலை கைவிடுமாறு சுந்தரபாண்டியனிடம் கூறியுள்ளார். ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் கள்ளக்காதலை தொடர்ந்ததால் கொலை செய்தோம் என கூறியுள்ளார். மேலும், தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.