சத்தியமங்கலம் அருகே 55 வயது கள்ளக்காதலியை தீர்த்து கட்டிய 30 வயது கள்ளக்காதலனை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையில் வசித்து வந்தவர் தேவி (55). இவரது கணவர் பெயர் சுரேஷ். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர் லாரி கிளினராக உள்ளார். அடிக்கடி வேலைக்கு வெளியூர் சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 20-ம் தேதி வீட்டில் தேவி கொடூரமாக கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தேவி பிணமாக கிடந்த இடத்தில் மது பாட்டில் ஒன்று கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கள்ளக்காதல் தகராறில் தான் இந்த கொலை நடைபெற்று இருக்கலாம் என்று போலீசார் தரப்பில் சந்தேகிக்கப்பட்டது. 

இந்த தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தியதில் கொலை செய்தது அவரது கள்ளக்காதலன் என்று தெரியவந்தது. தேவியின் கணவர் அடிக்கடி வேலைக்காக லாரியில் வெளியூர் சென்று விடுவதால் தேவிக்கும் கடம்பூரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (30) என்ற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தேவியின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் ராமகிருஷ்ணன் சென்று தேவியுடன் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்தார். அப்போது இருவரும் மது குடித்து ஜாலியாக இருந்து உள்ளனர். 

இந்நிலையில் தனது கள்ளக்காதலனிடம் தேவி ரூ.7,500 கடன் வாங்கி உள்ளார். இந்த பணத்தை அவர் திருப்பி கேட்ட போது “என்ன அவசரம் பிறகு தருகிறேன்” என்று கூறினாராம். இதனால், ஆத்திரமடைந்த ராமகிருஷ்ணன் அரிவாளை எடுத்து தேவியை கொடூரமாக வெட்டி கொலை செய்துள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருந்து வந்த ராமகிருஷ்ணனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.