பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு.. இதற்காக தான் கொலை செய்தேன்.. கள்ளக்காதலன் பகீர்.!
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காலூர் மதுரா செல்வாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சாந்தி (45). இவர் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

திருவண்ணாமலை அருகே கழுத்தை அறுத்து பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காலூர் மதுரா செல்வாநகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி சாந்தி (45). இவர் வீட்டின் வெளியே தூங்கிக்கொண்டிருந்த போது கொடூரமாக கழுத்தை அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், செந்தில்குமார், சாந்திக்கு செல்போன் செய்ததை வைத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலீசாரிடம் பல்வேறு அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். சாந்திக்கும், செந்தில்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியுள்ளது. அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
திடீரென சாந்தி செந்தில்குமாருடன் பழகுவதை தவிர்த்து வந்துள்ளார். போன் செய்தாலும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சென்று, தூங்கிக்கொண்டிருந்த சாந்தியை கழுத்தை அறுத்து துடிதுடிக்க கொலை செய்துள்ளார். செந்தில்குமார், சாந்திக்கு செல்போன் செய்ததை வைத்து அவரை கைதுசெய்ததாக போலீசார் தெரிவித்தனர்.