சூலூர் அருகே கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மனைவியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த கணவனை போலீசார் தேடிவருகின்றனர்.

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கள்ளப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கல்லுக்குழி அருகில் ஒண்டிகாரன் தோட்ட பகுதியில் சுதர்சன் (26) என்பவர் வசித்து வருகிறார். இவரது சொந்த ஊர் ஒடிசா ஆகும். இவருக்கு திருமணமாகி சத்யா (23) என்கிற ரூனு என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர். சுதர்சன் அதே பகுதியில் கூலி வேலை செய்து வந்தார்.

இவரது வீட்டுக்கு அருகில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ரஞ்சித் (22) என்பவர் வசித்து வந்து உள்ளார். இந்நிலையில், சுதர்சனின் மனைவியாகிய சத்யாவுக்கு அருகில் வசிக்கும் ரஞ்சித்துக்கும் பல மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இது குறித்து அறிந்த சுதர்சன் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் ரஞ்சித்தையும் அழைத்து அவர் கண்டித்துள்ளார். ஆனால்,  அவர்கள் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் ரஞ்சித் தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் வந்தார். நடந்தவற்றை எல்லாம் மறந்து நண்பர்களாக இருப்போம் என அவர் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அங்கு, ரஞ்சித் மற்றும் சுதர்சன், சத்தியா ஆகிய 3 பேரும் மது அருந்தி உள்ளனர். சிறிது நேரம் கழித்து சுதர்சன் இறைச்சி வாங்குவதாக கூறிக் கொண்டு வெளியே சென்றுள்ளார். பிறகு திரும்பவும் அவர் வீட்டுக்கு வந்து பார்க்கும்போது சத்யாவும், ரஞ்சித்தும் உல்லாசமாக இருந்துள்ளனர். இதனைப் பார்த்து ஆத்திரமடைந்த சுதர்சன் அருகிலிருந்த இரும்பு கம்பியை எடுத்து இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். 

இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சத்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் ரஞ்சித்தும் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். பின்னர், அங்கிருந்து தப்பித்து சென்றார். சுதர்சன் தலைதெறிக்க ஓடுவதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் ரத்தயா இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்நதனர். இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிருக்கு போராடிய ரஞ்சித்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சத்யாவின் உடலை கைப்பற்றி பி ரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.