கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனின் கை, கால்களை கட்டிப்போட்டு மிளகாய் பொடி தூவியும் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மனைவி மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாவிஷ்யா பர்ஹகோஹைன் (38) கடந்த 2014-ம் ஆண்டில் குவின்சியா (28) என்ற பெண்ணை மணந்தார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. பாவிஷ்யா பவாயில் உள்ள கால் சென்டரில் வேலை பார்த்து வந்தார். அப்போது, குவின்சியாவுக்கு சத்விர் நாயர் (24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது கணவர் பாவிஷ்யாவுக்கு தெரிய வந்ததும் தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. 

இதையடுத்து அவர் நைகாவ் வீட்டை காலி செய்து விட்டு வசாய் கிழக்கு, பிரதாப்கட் சொசைட்டியில் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பத்துடன் வசிக்கத் தொடங்கினார். ஆனால் சத்விர் நாயரும் அதே பகுதிக்கு வந்து தங்கியிருந்தார். இதனால் தம்பதியிடையேயான மீண்டும் சண்டை ஏற்பட்டது. இதனால், கடும் ஆத்திரமடைந்த குவின்சியா தனது கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். இதனையடுத்து, தனது கள்ளக்காதலனை தொடர்புகொண்டு தன் வீட்டுக்கு வரவழைத்தார்.

பின்னர், தூங்கிக் கொண்டிருந்த கணவரின் கை, கால்களை இரண்டையும் கட்டினர். கொதிக்கும் எண்ணெய்யை அவருடைய உடல் மீது ஊற்றினர். மிளகாய்ப்பொடியை கண்ணில் தூவினர். பிறகு சுத்தியலால் தலையில் தாக்கினர். உடலில் மின்சாரத்தை பாய்ச்சி ஷாக் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. வலி தாங்காமல் அலறியதை அடுத்து அக்கம்பக்கத்தின் வீட்டின் முன்பு குவிந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் குவின்சியா மற்றும் சத்விர் நாயர் இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வலியால் துடித்துக்கொண்டிருந்த பாவிஷ்யாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது மருத்துசமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, மனைவி குவின்சியா மற்றும் கள்ளக்காதலன் சத்விர் நாயர் ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.