நெல்லை அருகே கணவன் வேலைக்கு சென்ற பிறகு கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாகுடியை அடுத்த செங்குளம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்து பாண்டி (40). இவர் தூத்துக்குடியில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முப்புடாதி (35). இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான். முப்புடாதி சென்னையில் ஒரு பிளாஸ்டிக் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு அவருக்கு வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு வந்து கணவருடன் வசித்து வந்தார்.

முத்துபாண்டி தினமும் அதிகாலை 5 மணிக்கு வேலைக்கு சென்றுவிட்டு இரவு 10 மணிக்குத்தான் வீடு திரும்புவார். நேற்று இரவு 10 மணிக்கு அவர் வேலை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவரது வீடு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது வீட்டுக்குள் முப்புடாதி கழுத்து, கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்து  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் முத்துபாண்டி உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முப்புடாதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. முத்துப்பாண்டி பகலில் வேலைக்கு சென்று விட்டு தினசரி இரவில் தான் வீட்டுக்கு வருவார். இதனால் பகலில் தனிமையில் இருந்த முப்பிடாதிக்கு அந்த பகுதியை சேர்ந்த 2 பேருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் இருவருடன் மாறி மாறி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இது முத்துப்பாண்டியின் உறவினர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் முப்பிடாதியை எச்சரித்துள்ளனர். ஆனால் அதையும் மீறி, முப்பிடாதி தொடர்ந்து கள்ளத்தொடர்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த முத்துப்பாண்டியின் உறவினர்கள் நேற்று இரவு, வீட்டில் தனியாக இருந்த முப்பிடாதியை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது.இந்த கொலை தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.