மத்திய பிரதேசத்தில் உல்லாசமாக இருந்த மனைவியையும், கள்ளக்காதலனையும் கட்டையால் அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய பிரதேச மாநிலம் கார்கோனைச் சேர்ந்தவர் லோகேஷ்(34). இவரது மனைவி அனிதா(28). இவர்கள் தசங்காவில் வசித்து வந்தனர். அனிதாவுக்கு அதேபகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவனுடன் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இவர்களின் கள்ளக்காதலை அறிந்த லோகேஷ் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால், இருவரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொண்டு உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் கள்ளக்காதல் ஜோடி வீட்டில் தனியாக உல்லாசமாக இருந்ததை லோகேஷ் பார்த்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அவர் இருவரையும் அங்கு கிடந்த கட்டையால் சரமாரியாக தாக்கியதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இதனையடுத்து, கள்ளக்காதலன் சடலத்தை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள ஆள் நடமாட்டம்  இல்லாத பகுதியில் தள்ளிவிட்டு கண்களை தோண்டி எடுத்து வீசினார். பின்னர், வீடு திரும்பி மனைவியின் சடலத்தை தூக்கிக் கொண்டு வெளியே வந்து வாசலில் போட்டு கத்தினார். அக்கம்பக்கத்தினர் வந்து விசாரித்த போது என் மனைவிக்கு ஏதோ நடந்துவிட்டது அவள் வாயில் இருந்து ரத்த வெளியே வருகிறது என்று நாடகமாடினார்.

சந்தேகமடைந்த மக்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பபெண்ணின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, லோகேஷிடம் தீவிர விசாரணை நடத்தினார். அதில், மனைவியையும், கள்ளக்காதலனையும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர்.