கள்ளக்காதல் விவகாரத்தில் காதல் மனைவி தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நெல்லை மாவட்டம் தாழையூத்தை அடுத்த குறிச்சிகுளத்தை சேர்ந்தவர் சொரிமுத்து (35). இவர், கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அச்சன்புதூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று வந்தபோது அப்பகுதியைச் சேர்ந்த ரம்லத் (31) என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு விட்டு வேலைக்காக சொரிமுத்து கேரளாவிற்கு சென்றார். விடுமுறை கிடைக்கும் போது மட்டும் குடும்பத்தினரை பார்த்துவிட்டு செல்வார். 

இந்நிலையில், அப்பகுதியில் இருக்கும் ஒரு இளைஞருடன் ரம்லத்துக்கு நட்பு ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலமாக மாறியுள்ளது. இவர்கள் அடிக்கடி தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனிடையே, கடந்த 1ம் தேதி இரவில் ரம்லத்தும், வாலிபரும் தனிமையில் இருந்துள்ளனர். இதையறிந்து அங்கு வந்த சொரிமுத்துவின் உறவினர்களை கண்ட வாலிபர் வீட்டின் பின்புறம் வழியாக தப்பியோடினார். ரம்லத்தை  ஒரு அறையில் அடைத்து வைத்திருந்தனர். ஆனால், ரம்லத் யாருக்கும் தெரியாமல் கள்ளக்காதலுடன் சென்று விட்டாக கூறப்பட்டது. இது தொடர்பாக அவரது கணவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த 3ம் தேதி, சொரிமுத்துவின் சகோதரர் தாழையூத்து  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தகவலறிந்த சொரிமுத்து நேற்று முன்தினம் ஊர் திரும்பினார். அவருக்கு அரசு மருத்துவர்கள் நடத்திய மருத்துவ சோதனையில் நோய் தொற்று இல்லை என தெரிய வந்தது. நேற்று அதிகாலையில் சொரிமுத்து, ரம்லத்தின் செல்போனில் தொடர்பு கொண்டு உன்னை மன்னித்து விட்டேன். குழந்தைகளுக்காக குடும்பம் நடத்த வருமாறு தெரிவித்தார். இதனை நம்பி போன காதல் மனைவி  ரம்லத்லாத்தை மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து காதல் மனைவியின் தலையை துண்டாக்கினார். இதனையடுத்து,  தாழையூத்து போலீசில் சொரிமுத்து சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.