கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்து கொண்டு வெளியில் சுற்றி திரிந்த மனைவியை தட்டி கேட்டதால் ஆத்திரம் அடைந்து இரும்புக் கம்பியால் தனது கணவனை கடுமையாக தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சென்னை திருவல்லிக்கேணி தர்கா மெயின் தெருவை சேர்ந்தவர் சாமுவேல் (30) கேட்டரிங் வேலை செய்து வரும் இவருக்கு மேரி (28) என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வேளச்சேரியில் உள்ள அழகு நிலையம் ஒன்றில் வேலை செய்து வந்தார். அப்போது அங்கு வேலை செய்யும் இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. இது காலபோக்கில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.  இருவரும் பல இடங்களில் சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- படிக்கிற வயசில் காதல்... கர்ப்பம்... உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த அக்காவை கொலை செய்து நாடகமாடிய தங்கை..!

தனிமையில் இருக்கும் போது அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தது கணவருக்கு தெரியவந்தது. இதனையடுத்து,  கணவர் சாமுவேல் இருவரையும் கடுமையாக கண்டித்தார். ஆனாலும், இவர்கள் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின்பேரில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மேரி தனது ஆண் நண்பருடன் செல்போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சாமுவேல் தனது மனைவியை மீண்டும் கண்டித்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;-  கொழுந்தனுடன் அண்ணி அடிக்கடி உல்லாசம்... நேரில் பார்த்த அண்ணன்... கதற கதற நடத்திய சம்பவம்..!

ஆத்திரமடைந்த மேரி வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வந்து கணவன் சாமுவேல் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த சாமுவேல் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனையடுத்து, சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் திருவல்லிக்கேணியில் அப்பகுதியில் வெரும் பரபரப்பு ஏற்பட்டது.