கரூரில் கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த பெற்ற மகனை கள்ளக்காதலுடன் சேர்ந்து தாய் கொடூரமாக அடித்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கரூர் மாவட்டம்  ராயனூர் நேதாஜி நகரில் வசித்து வருபவர் நீலவேணி (28). இவரது கணவர் மணி. இந்த தம்பதிக்கு மாதவன் (9) என்கிற மகன் உள்ளான். இந்நிலையில் நீலவேணிக்கும், மணிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், நீலவேணிக்கும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளத்தொடர்பாக மாறியுள்ளது. சம்பவத்தன்று நீலவேணியின் வீட்டுக்கு பாலசுப்பிரமணி வந்துள்ளார். அப்போது கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததாக கூறி, பாலசுப்பிரமணியும், நீலவேணியும் சேர்ந்து மாதவனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மாதவனின் நெற்றி, கண் உள்ளிட்ட இடத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அக்கம், பக்கத்தினர் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாதவன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெற்ற தாயே மகனை கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.