ஆசிரியருடன் உல்லாசமாக இருந்த கல்லூரி மாணவனை கையும் களவுமாக பிடித்து கணவர் போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தனியார் கல்லூரி ஒன்றில் இயற்பியல் பாடப்பிரிவுகளில் மாணவர் சக்திவேல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அதே கல்லூரியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஆசிரியையும் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் கல்லூரியில் பார்க்கும் போது சாதாரணமாக பேசிக்கொண்டு வந்தனர். இதனையடுத்து, அவர்களின் நட்பு, நட்பையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு சென்றது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. சக்திவேல் ஆசிரியையிடம் அவரது உணர்ச்சியைத் தூண்டும் விதமாக பேசியதால் அவரிடம் மயங்கினார். 

இந்நிலையில், ஆசிரியையின் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஆசிரியை சக்திவேலுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இது விவகாரம் நாளடைவில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. 

உடனே ஆசிரியையின் இந்த செயல்பாடு தொடர்பாக அக்கம்பக்கத்தினர் அவரது கணவருக்கு போன் செய்து தெரியப்படுத்தினர். இதனையடுத்து, அவர் திடீரென வெளிநாட்டில் திரும்பிய போது ஆசிரியை கல்லூரி மாணவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதை நேரில் கண்ட கணவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதனையடுத்து, இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.