இனி நீங்கள் வீட்டுக்கு வரவேண்டாம். உங்களால் எங்களது குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என கூறிய கள்ளக்காதலியை கொடூரமாக கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செல்வம்(40) சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி தேவி(38) இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர், கடந்த 6 மாதமாக கவுக்கார்பேட்டையில் உள்ள மொத்த விற்பனை மிளகாய் மண்டியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், இவருக்கும் அதே மண்டியில் பணிபுரியும் கன்னிகாபுரம் எம்எஸ் மூர்த்திநகர் பகுதியை சேர்ந்த உதயகுமார்(25) என்பவருக்கும் பழக்கம் ஏறு்பட்டு வந்துள்ளது. இந்த வழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு தேவி கள்ளக்காதலுடன் சேர்ந்து வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளது. இந்த விவகாரம் கணவர் செல்வத்துக்கு தெரியவந்துள்ளது. இதனால், கோபமடைந்த செல்வம் இருவரையும் கண்டித்துள்ளார். 

தேவியை வேலைக்கு அனுப்பாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை 4 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உதயகுமார் தேவி வீட்டிற்கு வந்துள்ளார். அங்கிருந்த தேவி இனி நீங்கள் வீட்டுக்கு வரவேண்டாம். உங்களால் எங்களது குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுகிறது என கூறியுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த உதயகுமார் தேவி வீட்டில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து வந்து அவரது தலை, கை மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரி குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

இதனையடுத்து, தேவியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுதொடர்பாக வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், சம்ப இடத்துக்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் மயங்கிக்கிடந்த தேவியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள உதயகுமாரை தேடி வருகின்றனர்.