கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டி சமூகவலைதளத்தில் பதிவேற்றிய தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். 

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி சோம்பட்டி பகுதியை சேர்ந்த கிருபாநிதி மனைவி ஜெயந்தி(35). இவருக்கும் அன்னசாகரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சசிகுமார்(37) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனால், ஜெயந்தியும், சசிகுமாரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதனை சசிகுமார், ஜெயந்திக்கு தெரியாமல் வீடியோ மற்றும் புகைப்படங்களாக எடுத்து வைத்துள்ளார். இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த  ஜெயந்தி அவற்றை அழித்துவிடும் படி கூறியுள்ளார். ஆனால், சசிகுமாரோ வீடியோவை காட்டி தான் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என மிரட்டி வந்துள்ளார். ஆனால், ஜெயந்தி சசிகுமாரின் தொடர்பை துண்டித்ததோடு, அவர் உல்லாசத்துக்கு அழைத்தபோதும் செல்வதற்கும் மறுத்துவிட்டார். 

இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார் உல்லாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.