ஓசூர் அடுத்த வெங்கடேஷ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்(32). பெயின்டர் இருவருக்கும் சிவகாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடையில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் பீர் பாட்டிலால் குத்தி பெயிண்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நாளபெட்ட அக்ரஹாரம் பகுதியில் வசித்து வருபவர் லட்சுமணன் (56). இவரது இரண்டாவது மனைவி சிவகாசி(40). இவர் கட்டிட சித்தாளாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு பார்த்திபன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில், ஓசூர் அடுத்த வெங்கடேஷ் நகர் பகுதியில் வசித்து வருபவர் சதீஷ்(32). பெயின்டர் இருவருக்கும் சிவகாமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடையில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாளடைவில் கணவருக்கு தெரியவந்ததையடுத்து சிவகாமி மற்றும் சதீஷை கண்டித்துள்ளார். ஆனால், அவர்கள் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால், சதீஷை கொலை செய்ய லட்சுமணன் திட்டம் தீட்டினார். அதன்படி நேற்றிரவு லட்சுமணன், பார்த்திபன் மற்றும் நண்பரான மகேந்திரன் ஆகியோர் சதீஷை மது அருந்த வருமாறு அழைத்துள்ளார். அதன்படி நாளபெட்ட அக்ஹாரம் பகுதியில் அமர்ந்து லட்சுமணன் பார்த்திபன், மகேந்திரன் சதீஷ் ஆகியோர் மது அருந்தினர்.
அப்போது வட்சுமணனுக்கும் சதீஷிற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு முற்றிய நிலையில் அங்கிருந்த பீர் பாட்டிலை உடைத்த லட்சுமணன், சதீஷ் கழுத்தில் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த சதீஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து உயிரிழந்தார். இதையடுத்து, அங்கிருந்து லட்சுமணன், பார்த்திபன், மகேந்திரன் ஆகியோர் தப்பினர்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சதீஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
